"கிரிக்கெட் கடவுள்" என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், பல்வேறு இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருந்து வருகிறார். சில ரசிகர்கள் இவரை கடவுளாகவே வழிபட்டும் வருகின்றனர். அனைத்து கால சிறந்த வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், பேட்டிங்கில் பலதரப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக, சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த வீரர் எனும் பட்டியலில் இவரே முதல் இடத்தில் நீடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளரும் கூட. சுழல் பந்து வீச்சை மேற்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 200 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் 44 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவற்றில் மிகச் சிறந்த பவுலிங் சாதனையையும் படைத்துள்ளார். எனவே, இவர் சாதித்துள்ள சில பவுலிங் சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.ஒருநாள் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் விக்கெட்டை கைப்பற்றிய இந்தியர்:
தமது பதினாறாவது வயதிலேயே வயதிலேயே சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இருப்பினும், தனது பந்துவீச்சின் மூலம் முதலாவது சர்வதேச விக்கெட்டை கைப்பற்ற இவர், சில காலம் எடுத்துக் கொண்டார். அதன்படி, 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஷன் மோகனம்மாவின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். சச்சின் டெண்டுல்கரின் பந்துவீச்சில் கேட்ச் முறையில் அந்த பேட்ஸ்மேனின் விக்கெட் கைப்பற்றப்பட்டது. அதே வேளையில், சர்வதேச கிரிக்கெட்டின் மிக இளம் வயதில் விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியர் என்ற பெருமையையும் படைத்தார், சச்சின் டெண்டுல்கர். அப்போது அவரின் வயது வெறும் 17ஆண்டுகள் 224 நாள்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர், அத்தகைய சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளரான மனிந்தர் சிங் படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான அதே போட்டியில், அர்ஜுன ரணதுங்கவின் விக்கெட்டையும் சச்சின் டெண்டுல்கர் கைப்பற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. அதோடு பேட்டிங்கில் 41 பந்துகளை சந்தித்து 53 ரன்களையும் விளாசியுள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலித்தால் அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
#2.ஒருநாள் போட்டிகளின் இறுதி ஓவர்களில் இருமுறை ஆறுக்கும் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த ஒரே பந்துவீச்சாளர்:
நவீனகால கிரிக்கெட்டில் கடைசி 40 முதல் 50 ஓவர்கள் வரை சராசரியாக 8க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்படுகின்றன. அதுவும் ஆட்டத்தின் 50வது ஓவரில் 10 முதல் 12 ரன்கள் குவிக்கப்படுகின்றன. அந்த ஓவர்களில் மிகவும் சிக்கனமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டால் அவர்களின் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதுவும் கடைசி ஓவரில் 6-க்கும் குறைவாக ரன்களை கட்டுப்படுத்துவது மிக கடினமான செயலாகும். அத்தகைய சாதனையை இருமுறை புரிந்துள்ள ஒரே பந்துவீச்சாளர் சச்சின் டெண்டுல்கர் தான். ஆம், 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் பந்துவீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார், சச்சின் டெண்டுல்கர். அதேபோல், 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஆட்டத்தின் ஐம்பதாவது ஓவரை வீசிய சச்சின் டெண்டுல்கர், தனது முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றியதால் எதிரணியில் பத்தாவது விக்கெட்டும் சரிந்தது. இதன் காரணமாக, இந்திய அணி திரில் வெற்றியை ருசித்தது.