#1.ஆசிய கோப்பை தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்துவீச்சாளர்:
ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் எதிரணியின் பார்ட்னர்ஷிப்களை உடைத்தெறிய பகுதிநேர பந்துவீச்சாளர்களை அந்த அணியின் கேப்டன்கள் அறிமுகப்படுத்துவார்கள். அதுபோல, சில நேரங்களில் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்துக் கொண்டிருக்கும் பார்ட்னர்ஷிப்களை களைய சச்சின் டெண்டுல்கர் பந்துவீச முற்படுவார். அவ்வாறு, 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இவர் தனது பந்துவீச்சை மேற்கொண்டார் அந்த தொடரின் 6 போட்டிகளில் பந்து வீசி 12 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அதுவும் குறிப்பாக, ஐந்து இன்னிங்சில் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது இவர் தனது பந்துவீச்சின் மூலம் கைப்பற்றி உள்ளார். எனவே, ஆசிய கோப்பை தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்னும் சாதனையை படைத்தார், சச்சின் டெண்டுல்கர். அதுமட்டுமின்றி, ஆசிய கோப்பை தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்த பட்டியலில் 14 விக்கெட்கள் உடன் இர்பான் பதான் முதலிடத்தில் உள்ளார். மேலும், அந்த தொடரின் பேட்டிங்கிலும் கவனம் செலுத்திய டெண்டுல்கர் 281 ரன்களை குவித்து, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற செய்தார். இருப்பினும், இலங்கை அணிக்கு எதிரான அந்த இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தது.