"ஜென்டில்மேன் கேம்" எனப்படும் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் மிக அபாயகரமான போட்டிகளில் ஒன்றாகும். கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போது பல்வேறு வீரர்கள் காயப்பட்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இந்திய வீரரான ராமன் லம்பா வங்கதேசத்தில் நடைபெற்ற ஒரு பிரிமியர் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் காயப்பட்டு மூன்று நாட்கள் கோமா நிலைக்கு சென்று, அதன் பின்னர் இறந்தார். இதுபோல, பலமான காயங்கள் அடைந்திருந்தாலும் களத்தில் மீண்டும் இறங்கி சில வீரர்கள் தைரியமாக விளையாடியுள்ளனர். அப்பேர்ப்பட்ட சிறந்த மூன்று விரர்களை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.உடைந்த கையுடன் விளையாடிய கிரீம் ஸ்மித்:
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த தைரியமான நகர்வு நடந்துள்ளது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் வீசிய பந்து கிரீன் ஸ்மித்தின் கையை முறித்தது. இதனால், 30 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் ஆட்டத்தில் இருந்து விலகினார். இந்த டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் தென் ஆப்பிரிக்கா அணி 8.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே மீதம் இருந்த நிலையில் தவித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், அடிபட்டிருந்த கிரீம் ஸ்மித் மீண்டும் களத்தில் புகுந்து சக வீரரான மக்காயா உடன் தடுப்பாட்டம் போட்டு அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முன்வந்தார். இருவரும் இணைந்து ஆறு ஓவர்கள் நிலைத்து நின்றனர். இரு ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கிரீன் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். என்னதான் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், கிரீம் ஸ்மித் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றார்.
#2.உடைந்த தாடையுடன் விளையாடிய அணில் கும்ப்ளே:
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களையும் அள்ளிய இரு பந்துவீச்சாளர்களில் ஒருவர், அணில் கும்ப்ளே. சுழற்பந்து ஜாம்பவானான இவர், ஒரு முறை உடைந்த தாடையுடன் கட்டு கட்டிக்கொண்டு களத்தில் வந்து விளையாடினார். 2002ஆம் ஆண்டு ஆன்ட்டிகோவாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டில்லன் வீசிய பந்து இவரின் முகத்தாடையை உடைத்தது. இருப்பினும், சிகிச்சை எடுத்துக்கொண்டு களத்தில் திரும்பி 14 ஓவர்களை வீசினார். அதோடு மட்டுமல்லாமல், பிரையன் லாராவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தான் கண்ட தைரியமான அவற்றில் உடைந்த தொடையுடன் பந்துவீசிய கும்பிளேவின் செயல்பாடும் ஒன்று கூறினார். இதைப்பற்றி கும்பிளேவிடம் கேட்டபோது, தான் ஓரமாக உட்கார விரும்பவில்லை என்று எதார்த்தமாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
#1.ஒற்றை கண்ணுடன் விளையாடிய மன்சூர் அலிகான்:
இந்திய அணியின் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவர், மன்சூர் அலிகான் பட்டோடி. 1961ஆம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் இவரது வலது கண்ணில் கண்ணாடி குத்தியது. இதனால், ஒற்றைக் கண்ணை இழந்த போதிலும் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார் அதோடு மட்டுமல்லாமல், ஒற்றை கண்ணுடன் கிரிக்கெட் விளையாடும் முயற்சி செய்த பின்னர் அதே ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மதராஸ் டெஸ்டில் சதமடித்ததனால் முதல்முறையாக தொடரை வென்று சாதனை படைத்தது, இந்திய அணி. 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணியின் கேப்டன் நரி காண்ட்ராக்டர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால், மன்சூர் அலிகான் அணியை வழி நடத்தியதன் மூலம் உலகின் மிக இளம் வயதில் அணியை வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். 46 டெஸ்ட் போட்டியில் விளையாடி 2793 ரன்களை குவித்து ஓய்வு பெற்றார். இவரை பலரும் "புலி" என்றே அழைத்தனர். எனவே, மிகச்சிறந்த தைரியமான ஆட்டங்களை ஒப்பிடும்போது இவரின் ஒற்றைக்கண் போராட்ட சாதனை முன்னிலை வகிக்கிறது.