அடிலெய்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்

Vijay Shankar
Vijay Shankar

நேற்று ( ஜனவரி 12 ) சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி யாரும் எதிர்பாராத ஒன்றாகும்.2018ல் ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெற்றி ஒரு புத்துணர்ச்சி தரும் விதமாக அமைந்தது. அடிலெய்டில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு தொடரை தீர்மானிக்கும் போட்டியாகும். அடிலெய்டு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரை இழந்து விடும். 2019 உலகக் கோப்பை ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில். இந்திய அணியின் இத்தகைய தோல்வி இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி கண்டிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியில் சில மாற்றங்களை செய்து ஆகவே வேண்டும். சிட்னி ஒருநாள் போட்டியில் விளையாடாத , அணியில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது.அத்துடன் இந்திய அணி அணித்தேர்வில் சரியான கவனம் செலுத்த வேண்டும்.

அடிலெய்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட உள்ள மூன்று வீரர்களை நாம் இங்கு காண்போம்.

#1 ரவீந்திர ஜடேஜா-விற்கு பதிலாக விஜய் ஷங்கர்

இந்திய அணியின் தற்போதைய சிறந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சில காரணங்களால் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கண்டிப்பாக இவரை ஓடிஐ மற்றும் டி20 தொடரில் மிஸ் செய்யும் . ஏனெனில் இந்திய அணியில் உள்ள ஒரே வேகப்பந்து-ஆல்ரவுண்டராக தற்போது உள்ளார். இவருக்கு பதிலாக விஜய் ஷங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விஜய் ஷங்கரை நேரம் கடத்தாமல் இந்திய அணியில் சேர்க்கலாம். ஜடேஜா முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருந்தாலும் , ஆஸ்திரேலிய மைதான நிலைக்கு சுழற்பந்து அவ்வளவாக சரியாக இல்லை. விஜய் ஷங்கர் ஒரு வேகப்பந்து வீச்சு- ஆல்ரவுண்டர் ஆவார். எனவே இவரை ஜடேஜாவிற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கலாம்.

#2 கலீல் அகமதுவிற்கு பதிலாக யுஜ்வேந்திர சகால்

Yuzvendra chahal
Yuzvendra chahal

இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது சமீபத்தில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். உலகக்கோப்பை அணியிலும் இவருக்கு இடமளிக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளம் ஸ்விங் பந்துவீச்சிற்கு ஏற்றதாக இல்லை. எனவே இவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்யலாம்.

இவர் கடந்தாண்டு மும்பையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4வது ஓடிஐ போட்டியில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இவர் விளையாடிய மற்ற ஆடுகளங்கள் அனைத்திலுமே அதிக ரன்களை தனது பந்துவீச்சில் எதிரணிக்கு அளித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரிலும் இதே கதைதான் இவரது பந்துவீச்சில் தொடர்கிறது.

யுஜ்வேந்திர சகால் கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று குல்தீப் யாதவுடன் சேர்ந்து ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இவரது சுழலை கையாள்வது சற்று கடினமாக இருக்கும். எனவே கலீல் அகமதுவிற்கு பதிலாக யுஜ்வேந்திர சகாலை அடிலெய்டு ஒருநாள் போட்டியில் களமிறக்கலாம்.

#3 தினேஷ் கார்த்திக்-ற்கு பதிலாக கேதார் ஜாதவ்

Kedar jadhav
Kedar jadhav

இந்திய பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் மட்டுமே பந்துவீச்சிலும் சேர்ந்து கலக்க கூடியவராக உள்ளார். சிட்னி ஒருநாள் போட்டியில் இவர் ராயுடு-வை 6வது பந்துவீச்சாளராக பந்துவீச்சை மேற்கொண்டார். ஆனால் தற்போது இவரின் பந்துவீச்சை ஐசிசி கண்காணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் ராயுடு பேட்டிங்கிலும் சிட்னி டெஸ்டில் சொதப்பினார். இவர் சமீபத்தில்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை நிறுபித்து இந்திய அணியில் இடம்பெற்றார். இவர் இந்திய 4வது வரிசை பேட்ஸ்மேனாக தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

இந்திய அணி கண்டிப்பாக கேதார் ஜாதவ்-வை இந்திய XIல் சேர்க்க வேண்டும். இந்தியா தற்போது உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக்-ற்கு பதிலாக கேதார் ஜாதவ்-வை இந்திய XIல் சேர்க்கலாம். தினேஷ் கார்த்திக்-ற்கு ஒருநாள் போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை. தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ் இரண்டு பேரும் அணியில் இடம்பெற்றால் ஆல்-ரவுண்டர் ஒருவரை கண்டிப்பாக இந்திய அணி இழக்க நேரிடும். அத்துடன் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதார் ஜாதவ் 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலையும் ஏற்படும்.

வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டால் , கேதார் ஜாதவ்-வுடன் சேர்ந்து 10 ஓவரை வீச அனுமதிக்கலாம். கேப்டன். கோலி வேகப்பந்து அல்லது சுழற்பந்து எது வேண்டுமோ அதை 10 ஓவர்களுக்கு தேர்வு செய்து கொள்ளலாம்.

எழுத்து : நாயக்

மொழியாக்கம் : சதீஸ்குமார்

Quick Links

App download animated image Get the free App now