தற்பொழுது நடைபெறும் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பல விதிமுறைகள் இருப்பதால் பந்து வீச்சாளர்களால் பேட்ஸ்மென்களை போன்று ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை. இதன் காரணமாக சரிக்கு சமமான போட்டிகளை காண முடிவதில்லை.
முந்தைய காலங்களில் 250 ரன்களை கொண்டு வெற்றி பெற்றன அணிகள், ஆனால் இப்பொழுது 250 ரன்களை எளிதாக பேட்ஸ்மேன்கள் எட்டிவிடுகின்றனர். 300 ரன்களும் போதுமான இலக்கு என முடிவு செய்துவிட முடியாது. ஏனெனில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 360 ரன்கள் எடுத்தன, இந்த இலக்கை இங்கிலாந்து அணி எளிதாக அடைந்து வெற்றி பெற்றது.
இப்படிப்பட்ட பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் போட்டிகளின் தரத்தை அதிகரிக்க ஐசிசி 3 மாற்றங்களை செயல்படுத்த வேண்டும், அவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
1. ஒரு பந்தை உபயோகிப்பது
2011ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்த ஐசிசி விதிமுறைகளை கொண்டு வந்தது. இந்த விதிமுறையே தற்போதைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஏனெனில் பந்துகள் பழையதாக மாறாமல் புதிய பந்துகள் ஆகவே உள்ளதால் ரிவர்ஸ் ஸ்விங் ஆவதில்லை இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்கின்றனர்.
2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு பந்தை உபயோகித்தது போல் மீண்டும் ஒரு பந்தை உபயோகித்தால் கடைசிக் கட்டங்களில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்ப்பதை தவிர்க்கலாம். இதன்மூலம் பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் சுவிங்ம் செய்யலாம்.
2. 5 ஓவர் பவர்ப்ளே
5 ஓவர் பவர்ப்ளே மிகவும் பிரபலமான ஒரு விதிமுறையாகும். குறிப்பாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்த விதிமுறை மிகவும் பிரபலமானது. பேட்ஸ்மேன்கள் 16-40 ஓவர்களில் இந்த 5 பவர்பிளேவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பவர்ப்ளேவின் பொழுது வட்டத்திற்கு வெளியில் இரண்டு பீல்டர்களுக்கு மட்டுமே அனுமதி. இதன்மூலம் எந்த அணி இதை எப்படி பயன்படுத்துகின்றன என்பதை கான கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலாகவே இருந்தனர்.
தற்போது இந்த விதிமுறைகள் இல்லாததால் ஒருநாள் போட்டி சற்று மந்தமாகவே செயல்படுகிறது ஆகவே இந்த விதிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரலாம்.
3. பவுண்டரிகளின் தூரத்தை அதிகரிக்க
ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி விதிமுறை 19.1.3 ஆம் விதிப்படி அனைத்து மைதானங்களிலும் பவுண்டரிகளின் அளவானது ஆடுகளத்தில் இருந்து குறைந்த பட்ச தூரம் 59.43 மீட்ட்டர்களாகவும் (65 யார்டு) அதிகபட்ச தூரம் 82.29 மீட்டர்கள் (90 யார்டு) ஆகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய பேட்ஸ்மேன்கள் மிகவும் வலிமை வாய்ந்தவராகவும் பயன்படுத்தப்படும் பேட்கள் மிகவும் தரமானதாக இருப்பதாலும் அரைகுறையாக பேட்டில் படும் பந்துகளே பவுண்டரிகளை தாண்டி செல்கின்றன, இதனால் குறைந்தபட்ச தூரத்தை சற்று அதிகரிப்பதன் மூலம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம்.
அனைத்து மைதானங்களிலும் பவுண்டரிகளின் அளவு வித்தியாசமாகவே இருக்கும், அனைத்து மைதானங்களிலும் குறைந்தபட்ச பவுண்டரிகளின் அளவை மேற்கண்டவாறு அதிகரிப்பதன் மூலம் பேட்ஸ்மேன்கள் எளிதாக 4 மற்றும் 6 களை விளாசுவதை குறைக்கலாம். இதுமட்டுமின்றி பேட்ஸ்மென்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டியும் உருவாகும்.