இந்திய கிரிக்கெட் நிர்வாகம் 2008ல் ஐபிஎல் டி20 தொடரை அறிமுகப்படுத்தியது.2010ல் முதன்முதலாக ஐபிஎல் கிரிக்கெட் யுடியுபில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.ஐபிஎல் இளம்வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிபடுத்தும் ஒரு வழித்தடமாக உள்ளது.ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் தலா 3 கோப்பைகளை வென்று தலைசிறந்த அணிகளாகத் திகழ்கிறது. ஐபிஎல் உலகப்புகழ்பெற்ற டி20 தொடராகும்.அதிக ரசிகர்கள் ஐபிஎல் தொடரிற்கு உலகம் முழுவதும் உள்ளனர்.ஐபிஎல் தொடரானது இளம்வீரர்களை இந்திய அணிக்குத் தயார் செய்ய மிகவும் உறுதுணையாக உள்ளது.ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு சிறப்பாக விளையாடுபவர்கள் சர்வதேச அணியில் இடம் பிடிக்கின்றனர்.
சிலர் ஐபிஎல் இல் அனைத்து சீசனிலும் நன்றாக விளையாடியும் இந்திய அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர்.
நாம் இங்கு இந்திய சர்வதேச போட்டிகளில் சரியாக இடம் கிடைக்காமல் தவிக்கும் 3 சீரான ஐபிஎல் வீரர்களைப் பற்றிக் காண்போம்.
#3.சந்தீப் சர்மா

சந்தீப் சர்மா ஒரு சிறந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் 2010 & 2012 ல் இந்திய 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான அணியில் இடம்பெற்றுள்ளபோது 2012 ஆம் ஆண்டில் சேம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது இந்திய அணி.இவர் 2013 முதல் 2017 வரை பஞ்சாப் அணியில் பங்குவகித்தார்.2018ல் ஹதராபாத் அணிக்கு மாறினார்.
2017 ஐபிஎல் இல் அற்புதமாகப் பந்து வீசினார். கெயில், கோலி, டிவில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்களின் விக்கெட்டை ஒரே போட்டியில் எடுத்து சாதனை படைத்திருந்தார். பஞ்சாப் அணியின் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார்.ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் சிறப்பாகச் செயல்பட்டதால் 2015ம் ஆண்டு ஜிம்பாப்வேவிற்கெதிரான டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.ஆனால் அதற்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.ஐபிஎல் இல் சிறந்த வீரராக இருந்தாலும் சர்வதேச அணியில் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு இவருக்குக்கு கிடைத்தது.
#2.மந்தீப் சிங்

மந்தீப் சிங் ஒரு சிறந்த வலது கை மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன் .2010ஆம் ஆண்டின் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் துனைக்கேப்டனாகச் செயல்பட்டார்.2010ல் கொல்கத்தா அணியின் மூலம் ஐபிஎல் இல் அறிமுகமானார்.பின் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.2012 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 2 அரை சதம் உட்பட 432 ரன்களை விளாசி அந்த அணியில் அதிக ரன்களை விளாசி யவர் என்ற பெருமையைப் பெற்றார்.அத்துடன் " ரைசிங் ஸ்டார்" என்ற விருதினையும் பெற்றார்.2014 ஐபிஎல் சீசனில் பெங்களுரு அணிக்கு மாற்றப்பட்டார்.அந்த அணியில் இவருக்குச் சிராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2015 விஜய்ஹசாரே கோப்பையில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடித் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.2016ல் சர்வதேச டி20 அணியில் ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமானார்.அதன்பிறகு இவருக்கு சர்வதேச அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
#1.சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்கார வலது கைப்பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார்.இவர் ஐபிஎல் இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமானார்.ரஞ்சிக்கோப்பையில் கேரள அணியின் இளம் கேப்டன் ஆவார்.ஐபிஎல்-லில் 1000 ரன்களை விளாசிய முதல் இளம் வீரராவார்.அத்துடன் சேம்பியன் லீக் 20-20யில் அரை சதத்தை விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராவார்.
2015ல் ஜிம்பாப்வேவிற்கெதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அதற்குப்பிறகு தேர்வாளர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பவில்லை. தற்சமயம் நிறைய விக்கெட் கீப்பர்கள் வந்துவிட்டதால் தோனிக்கு மாற்றாக கூட இவருக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை.இந்திய அணியில் தோனி இல்லாத சில சமயங்களில் சிறப்பாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செயதுள்ளார்.
எழுத்து: விஷ்ணு சன்
மொழியாக்கம்: சதீஸ்குமார்