கிரிக்கெட் போட்டியானது தொடங்கி 142 வருடங்கள் கடந்தும் இன்றளவும் உலகின் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது இந்த கிரிக்கெட் போட்டிகள் சில மதிநுட்பமான முடிவுகளாலும் தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டமைக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு தலைமுறைக்கும் அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வந்து தன்னை மெருகேற்றி வருகிறது, இந்த கிரிக்கெட் போட்டிகள். இதில் ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒரு வீரராவது தங்களது வல்லமையால் இவ்வகை கிரிக்கெட் போட்டிகளை மாற்றியமைத்து வருகின்றனர்.
அதுபோன்ற தங்களது அசாத்திய திறமையால் கிரிக்கெட் உலகையே மாற்றிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#3.ஜான்டி ரோட்ஸ்:
நீங்கள் உங்களது வாழ்வில் சூப்பர்மேனை ஒருமுறையாவது கண்டதுண்டா? அதுவும் பறக்கும் மனிதனை?இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறார், ஒரு கிரிக்கெட் வீரர். ஆம், இவர் நிஜத்திலும் கிரிக்கெட் மைதானங்களில் மட்டும் பறக்கும் திறன் படைத்தவர். அவர் பெயர் தான் ஜோனாதன் நைல் ரோட்ஸ். அனைத்துலக கிரிக்கெட்டின் ஒரு ஆகச்சிறந்த பீல்டர் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால், இவரின் பீல்டிங் திறமையால் பலமுறை தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும், இந்த அசாத்திய திறமையால் மட்டுமே பல ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் ஒரு சிறந்த ஹாக்கி வீரரும் கூட.இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 2003-ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக பீல்டிங் பயிற்சியாளர் பதவியை மேற்கொண்டு வருகிறார்.
#2.ஷேன் வார்னே:
சுழற்பந்து வீச்சு ஒரு கலை. ஒரு வீரர் இந்த கலையில் தேர்ச்சி பெறுவது மிக கடினம். ஆனால், இந்த சுழற்பந்துவீச்சில் மிகவும் கைதேர்ந்தவர்களில் ஒருவர் என்று கூறினால் அது ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. இவரது கையில் இருந்து வெளிவரும் ஒரு பந்தை இப்படியெல்லாம் வீசலாம் என ஒரு சுழற் பந்துவீச்சாளர் தனது கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இவரது பந்து வீச்சுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் தீட்டும் திட்டத்தினையும் யுக்திகளையும் முறியடித்து அவர்களை ஆட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற தனது முதலாவது ஆஷஸ் தொடரில் மைக்கேல் கட்டிங்-க்கு மறக்கமுடியாத அதிர்ச்சியை தனது பந்துவீச்சால் அளித்தார். பேட்டிங்கில் கைதேர்ந்தவர்களாக ரிச்சர்ட்சன் மற்றும் ஆன்ரீவ் ஸ்டராஸ்-க்கும் எவரும் எதிர்பார்த்திராத வகையில் பந்துவீசி ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.2007-ம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், 708 டெஸ்ட் விக்கெட்களையும் 293 ஒரு நாள் போட்டிகள் விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
#1.சர் விவ் ரிச்சர்ட்ஸ்:
சர் விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்திற்குள் மிடுக்கான நடையுடன் கையை சுழற்றிக்கொண்டு தொப்பியை அட்ஜஸ் செய்தவாறு நுழைந்தாலே போதும் எதிரணி வீரர்களுக்கு ஒருவித பயமும் இருக்கையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு இவர் இன்று என்ன செய்யப்போகிறாரோ? என்ற புதுவிதம் சுவாரசியமும் தொற்றிக் கொள்ளும். ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை செலுத்த தவறியதில்லை உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களிடமிருந்து சற்று மாறுபட்டு இருந்த ரிச்சர்ட்ஸ், புதிய புதிய ஷாட்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவரது ஒவ்வொரு ஷாட்களும் அரக்கத்தனமாகவே இருந்தது. ஒரு டெஸ்ட் போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்தது இவரது அதிரடிக்கு சிறந்த உதாரணமாகும். இவர் நிச்சயம் இந்த காலக்கட்டதில் விளையாடி இருந்தால் ஐபிஎல் ஏலங்களில் பல அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இவரை தேர்ந்தெடுக்க நேரும். 1975 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இவர், டெஸ்ட் போட்டிகளில் 8540 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 6721 ரன்களும் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரின் லாராவும் இவரது வழித்தோன்றல்களாகவே அறியப்பட்டனர். இவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட ஹெல்மெட்டை அணிந்ததே இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு.
எழுத்து: உதய் ஜோஷி
மொழியாக்கம்: சே கலைவாணன்