இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி-20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரைப் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும் போட்டிகள் தான் கடைசி தொடராக உள்ளது. அதற்குப் பிறகு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுகின்றது. இந்திய அணி கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு அதிகமான ஆட்டங்கள் விளையாட வேண்டும். இந்திய அணி வீரர்கள் தொடரில் காயங்கள் ஏற்ப்படாமல் விளையாடுவது உலகக்கோப்பை தொடருக்கு முக்கியமான ஒன்று. உலகக்கோப்பை அணியைத் தேர்வு செய்ய ஒரு சில சிறிய பரிசோதனைகள் இந்திய அணி செய்ய வேண்டும். டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்க மூன்று பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
# 1 பவர் ப்ளே மற்றும் இறுதிகட்ட ஓவர்களில் சஹால் பந்துவீச்சு
பவர் ப்ளே ஓவர்களில் சஹால் பந்துவீச்சை இந்திய அணி முயற்சி செய்ய வேண்டும். ஸ்பின்னர்கள் பெரும்பாலும் நடுத்தர ஓவர்களில் தான் பந்து வீசுகின்றனர். இது இந்திய அணிக்கு மிகவும் வெற்றிகரமானதாக உள்ளது. உலகக் கோப்பையில் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் இறுதி ஓவர்களில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். புவனேஸ்வர் குமார் கடந்த ஓராண்டில் இறுதி ஓவர்களில் ரன்களைக் கொடுத்து வருகிறார். அவர் சில முறை தான் சிறப்பாக செயல்படவில்லை.
தற்போது புவனேஷ் மற்றும் பும்ரா முதல் மற்றும் மூன்றாவது பவர் ப்ளே ஓவர்களில் பந்து வீசுகின்றனர். ஹர்திக் மற்றும் ஸ்பின்னர்கள் இரண்டாவது பவர் ப்ளே மற்றும் மிடில் ஓவர்களில் பந்து வீசுகின்றனர். குல்தீப் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆரம்ப மற்றும் இறுதிகட்ட ஓவர்களில் சஹாலை முயற்சி செய்யலாம்.
# 2 ரிஷப் பண்ட், ஓப்பனிங் பேட்ஸ்மேன்
ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்தியாவின் சராசரி பவர் ப்ளே ஸ்கோர் 45. இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு பெரும்பான்மையாக இருப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பேரிஸ்டோவ், ராய், ஹேல்ஸ் ஆகியோர் தான். இந்திய அணி இது போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் மற்றும் ஷேன் வார்ன் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளனர். இந்திய அணிக்கான ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரராக ஆகும் வாய்ப்பு ரிஷப் பன்ட்டிற்கு இருக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். ரிஷப் பன்ட் ஒருவேளை ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் பேட்டிங் செய்யலாம். ஷிகர் தவானும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் என்றும் ஷேன் வார்ன் ஒரு பேட்டியில் கூறினார்.
# 3 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் கே.எல். ராகுலுக்கு இறுதி வாய்ப்பு தரலாம்
கே.எல். ராகுல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க வேண்டுமா என்பதை ஆஸ்திரேலியா தொடரில் சோதனை செய்யலாம். உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் தகுதியற்ற ஆட்டக்காரர் இருக்க கூடாது. அவர்கள் சரியான தருணத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர்களாக இருக்க வேண்டும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், தவான், கோலி ஆகியயோர் விளையாடும் போது ராகுல் 4-வது அல்லது 5-வது இடத்தில் பேட் செய்ய விரும்புவார். ஆனால் அது அவரது பொருத்தமான இடம் இல்லை. டாப் ஆர்டர் வரிசையில் ராகுல் விளையாடுவதற்கு முயற்சி செய்ய தங்கள் நிலையை மற்ற வீரர்கள் தியாகம் செய்யப் போகிறார்களா என்பது இந்த தொடரின் இறுதியில் தான் தெரிய வரும்.
எழுத்து-தீபக் மோகன்
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்