ஐபிஎல் தொடர்களில் கலவையான விமர்சனங்களை கொண்ட அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்த அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டம் வரை சென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மண்ணைக் கவ்வியது. ஒவ்வொரு வருடமும் புதுப்புது வீரர்களாக மாற்றியமைத்து வருகிறது, இந்த அணியின் நிர்வாகம். நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹேசனை பயிற்சியாளராக நியமித்துள்ளது, கிங்ஸ் லெவன் பஞ்சாப்.இவரின் மனநிலை ஐபிஎல் ஏலத்திலேயே நன்கு தெரிந்தது. காரணம், இவர் பரிந்துரைத்த வீரர்களில் அதிகமானோர் இளம் வீரர்களே.
ஏற்கனவே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லர் போன்ற அனுபவ வீரர்கள் உள்ள நிலையில் நிலையில் பயிற்சியாளர் மைக் ஆட்டத்தை மாற்றக்கூடிய 3 இளம் வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் அவர்களைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.
#1.முஜீப் உர் ரஹ்மான்:
கடந்தாண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்ற 17 வயதான முஜீப் ரஹ்மான் தொடரின் மாயச் சுழல் பந்துவீச்சாளர் என்று அனைவராலும் அறியப்பட்டார். இவரின் சூழல் மாற்றங்கள் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. மேலும், அதுவே பல பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அளிக்கக்கூடியதாகவும் அமைந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவம் மூலம் இந்த ஆண்டும் பஞ்சாப் அணிக்கு இவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம். அதுவே இந்த அணி இம்முறையாவது கோப்பையை வெல்ல உதவிகரமாக இருக்கும். உண்மையில், முஜிப் ரகுமான் ஒரு சாத்தியமான ஆட்டத்தை மாற்றியமைக்கக்கூடிய வீரர் என்றாலும் கடந்த முறை இவர் ஐபிஎல்லில் இவர் வெளிப்படுத்திய அணுகுமுறை நிச்சயம் ஆட்டத்தையே மாற்றிஅமைக்க கூடிய வீரர்களுக்கான பட்டியலில் இவரது பெயரையும் இணைக்க செய்தது.
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரது பெயரை இணைக்க தவறிய ஆப்கானிஸ்தான் தேர்வாளர்களுக்கு இந்த வருடம் ஐபிஎல் மூலம் ஒரு பாடம் கற்பிக்க போகிறார், முஜீப் ரஹ்மான். மேலும், அது இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் தன்னை இணைத்துக் கொள்ள ஒரு பாலமாகவும் ஐபிஎல் தொடர் அமையும். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பஞ்சாப் அணிக்காக முத்திரை பதிக்க காத்திருக்கிறார் ஆப்கானிஸ்தானின் மாயச் சுழல் வித்தைக்காரர் வித்தைக்காரர்.
#2.நிக்கோலஸ் பூரன்:
23 வயதேயான வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் சமீப காலங்களில் ஒரு அருமையான டி20 வீரராக உருவெடுத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் ஆகிய இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பளிக்கவில்லை. இதனால், தான் என்னவோ கடந்த ஆண்டு உலகம் முழுவதும் நடைபெற்ற டி20 தொடர்களில் தொடர்ச்சியாக பங்கேற்று அற்புதச் சாதனைகள் நிகழ்த்தியதால் இந்த ஆண்டு பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.
ஒருவேளை ஆடும் லெவனில் இவர் சேர்க்கப்பட்டால் ஒரு தரமான விக்கெட் கீப்பராகவும் அதிரடியான பேட்ஸ்மேனாகவும் விளங்கக் கூடியவர் ஆவார்.டாப் ஆர்டர் பேட்டிங்கில் சிறந்து விளங்கக்கூடிய பேட்ஸ்மேனான இவர், பஞ்சாப் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக அமைவார் எனவும் எதிர்பார்க்கலாம். நிச்சயம் பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் இவர் சேர்க்கப்பட்டால் அணியின் வெற்றிக்கு உறுதுணையாகவும் ஆட்டத்தை மாற்றியமைக்கக்கூடிய வீரர்களில் ஒருவராகவும் உருவெடுப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை
#3.சாம் கரன் :
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான சாம் கரன், தனது தொடர்ச்சியான பேட்டிங் திறமையாலும் அசாத்தியமான பவுலிங் திறமையாலும் உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். உண்மையில் இவருக்கு பேட்டிங்கில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடும் ஆற்றல் ஒளிந்துள்ளது. இது பேட்டிங்கில் அவ்வப்போது சொதப்பும் பஞ்சாப் அணிக்கு ஒரு கூடுதல் நன்மையாகும்.கூடவே பவுலிங்கில் 4 ஓவர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார். இதுபோன்ற காரணங்களால் பயிற்சியாளர் மைக் அணியின் சிறந்த இளம் வீரர்களின் இவரையும் ஒருவராக இவரையும் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளார்.
முஜிப் ரஹ்மானை போல இந்த ஐபிஎல் தொடரில் இவர் ஜொலித்தால் இவருக்கும் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முற்படுவார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இவர் இடம்பெற்ற போதிலும், ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் இவர் நன்கு செயல்பட்டால் பஞ்சாப் அணியின் ஐபிஎல் கோப்பை தாகத்தையும் தீர்க்க கூடியதாக அமையும்.