உலககோப்பைக்கு பின்னர் தற்போது இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடரை 3-0 எனவும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 22 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த தொடரானது இந்திய அணி பங்கேற்கும் முதலாவது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியானது 2002 க்கு பின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த டாப் 3 இந்திய வீரர்களை பற்றி விரிவாக காணலாம். சச்சின் டெண்டுல்கர், சேவாக், கங்குலி என பல முன்னணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பல டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தாலும் அவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இல்லை.
#3) விவிஎஸ் லக்ஷ்மன்
இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் விவிஎஸ் லக்ஷ்மன் . இவர் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் அவ்வளவாக விளையாடா விட்டாலும், டெஸ்ட்-ல் பெருமபாலான போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிலும் இவரின் பல இன்னிங்ஸ் இந்திய அணியை பலமுறை தோல்வியின் விளிம்பிலிருந்து காப்பாற்றியுள்ளது. இந்தியாவின் டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய இவர் 1996-97 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொண்டார். அந்த தொடரில் இவர் இந்தியாவின் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இரண்டு அரைசதங்களுடன் இவர் 172 ரன்கள் குவித்தார்.
அதன் பின் இந்தியா 2002-03 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டது. 5 போட்டிகள் அந்த தொடரின் அணைத்து போட்டிகளிலும் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் 8 இன்னிக்ஸ்ல் களமிறங்கிய இவர் 474 ரன்கள் குவித்தார். இதில் 4 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். 2006-ல் நடைபெற்ற தொடரில் 7 இன்னிக்ஸ்ல் களமிறங்கிய இவரால் வெறும் 257 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன் பின் கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மூன்று போட்டிகளில் 243 ரன்கள் குவித்தார் இவர். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும்.
ஒட்டுமொத்தத்தில் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 27 இன்னிங்ஸ் களமிறங்கி 1146 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், 10 அரைசதங்களும் இவரின் பெயரில் அடங்கும்.
போட்டிகள் : 16, இன்னிங்ஸ் : 27, ரன்கள் : 1146, அதிகபட்ச ரன் : 130