#2) சுனில் கவாஸ்கர்
இந்திய அணியின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் 1970-71 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் மண்ணில் டெஸ்ட் போட்டியில் களம் கண்டார். அந்த தொடரில் முதலாவது போட்டி ட்ராவில் முடிய இரண்டாவது போட்டியிலிருந்து கவாஸ்கருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. பின் அந்த தொடரில் 8 இன்னிங்ஸ்ல் களமிறங்கிய அவர் 4 சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 774 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் மட்டும் இவரின் பேட்டிங் சராசரி 154.80.
அதன் பின் 1975-76ல் நடைபெற்ற தொடரில் ஆண்டி ராபர்ட்ஸ் மற்றும் மிச்செல் ஹோல்டிங் போன்ற பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார். அந்த தொடரில் 7 இன்னிக்ஸ்ல் களமிறங்கிய இவர் தலா 2 சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 390 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 1982-83-ல் நடைபெற்ற தொடரில் 9 இன்னிங்ஸ்ல் களமிறங்கிய இவர் வெறும் 240 ரன்கள் மட்டுமே குவித்தார். இதில் ஒரே இன்னிங்ஸ்ல் 147 குவித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் 24 இன்னின்ஸ்ல் 1404 ரன்கள் குவித்துள்ளார்.
போட்டிகள் : 13, இன்னிங்ஸ் : 24, ரன்கள் : 1404, அதிகபட்சம்: 220
#1) ராகுல் டிராவிட்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் மறக்க முடியாத பேட்ஸ்மேனாக விளங்கிய ராகுல் டிராவிட் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அப்போதைய காலங்களில் அணைத்து அணிகளுக்கெதிராகவும் சதம் விளாசிய வீரராகவும் வளம் வந்தவர் இவர். இவர் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 1996-97, 2002, 2006, மற்றும் 2011டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றார். 1996 டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸ்ல் 360 ரன்கள் குவித்தார் டிராவிட். பின் 2002 தொடரில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 404 ரன்கள் குவித்தார்.
அதன் பின்னர் 2006 தொடரில் 496 ரன்களும், 2011 தொடரில் 251 ரங்களும் குவித்து தனது மேற்கிந்திய தீவுகள் மண்ணின் டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்தார்.
ஒட்டுமொத்தத்தில் 17 போட்டிகளில் விளையாடிய இவர் 3 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 1511 ரன்கள் குவித்துள்ளார்.
போட்டிகள் : 17, இன்னிங்ஸ் : 28, ரன்கள் : 1511, அதிகபட்சம்: 146.