17-ஆவது லோக்சபா தேர்தலானது ஏழு கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 23- ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. பரபரப்பாக நடந்து முடிந்த இந்த தேர்தலின் முடிவுக்காக பல்வேறு தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் தொழிலதிபர்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் அரசியலில் தடம் பதிக்க ஆசை கொள்கின்றனர். இந்த வரிசையில் தற்போது அரசியலில் இறங்கியுள்ள மூன்று கிரிக்கெட் வீரர்களை பற்றி காணலாம்.
#1.நவஜோத் சிங் சித்து:
இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான சித்து, ஒரு தொலைக்காட்சி பிரபலமாகவும் சர்ச்சைக்குரிய விமர்சகராகவும் இருந்துள்ள இவர், அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்த காலகட்டம் இருந்துள்ளது. விமர்சகராக தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்தபோது 2003 ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தவறான கருத்துக்களைப் பரப்பியதற்காக இவர் ஐசிசி-ஆல் வெளியேற்றப்பட்டார். அதன்பின் 2004ஆம் ஆண்டு பிஜேபியில் இணைந்து தன்னுடைய முதல் தேர்தலிலேயே அம்ரித்சரில் நின்று வெற்றியையும் அடைந்தார். பத்தாண்டுகள் எம்.பி-ஆக இருந்த இவர் 2017 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2. கௌதம் கம்பீர்:
முன்னாள் இந்திய அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேனாக திகழ்ந்த கௌதம் கம்பீர், சர்வதேச போட்டிகளில் இதுவரை 10000 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். 2011 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என்பது இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியவற்றுள் ஒன்று. இந்தாண்டு மார்ச் 22ஆம் தேதி இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். மேலும், ஒரு உண்மையான அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்ட இவர், பேரணிகளை நடத்துதல், கோஷங்களை எழுப்புதல், பேட்டிகளை வழங்குதல், வார்த்தைகள் போரில் ஈடுபடுதல் மற்றும் எதிர்த்தரப்பு தலைவரை கேள்வி கேட்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.
#3.கீர்த்தி ஆசாத்:
இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டரான இவர், 1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதன்முதலாக உலக கோப்பையில் வெற்றி பெறுவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, இவர் 25 ஒருநாள் போட்டிகளிலும் 7 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார். டெல்லி ரஞ்சி அணியில் விளையாடியுள்ள இவர், மொத்தம் 95 போட்டிகளில் விளையாடி 5000 ரன்களை விளாசியுள்ளார்.
இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பகவத் ஜா ஆசாத் என்பவருடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலின் ஆரம்பகட்டத்தில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்துள்ளார். பின்னர், டிசம்பர் 2015 -ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இருந்த நிதி மந்திரி அருண் ஜேட்லிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை அறிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.