இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்படும் போட்டியாக கிரிக்கெட் உள்ளது. அதாவது கிரிக்கெட் என்பது இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு மதம் எனவும் கூறலாம். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வெறும் 11 வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதற்க்கு அந்த 11 பேர் மட்டுமே திறமையான வீரர்கள் என கூறிவிட முடியாது. அவரைகளை காட்டிலும் அதிக திறமை வாய்ந்த வீரர்கள் நம் நாட்டின் பல பகுதிகளில் உள்ளனர். ஆனால் அவர்களை பொறுத்தவரையில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது ஒரு கனவாகவே போய்விடுகிறது. பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக பயிற்சி பெற்று தங்களது மாநிலத்திற்க்காக ரஞ்சி கோப்பை போட்டிவரை முன்னேறினாலும் அவர்களால் இந்திய அணி வரை முன்னேறே முடிவதில்லை. அதற்க்கு பல காரணங்கள் இடையூறுகளாக உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் கூற வரவில்லை.
இதையெல்லாம் தாண்டியும் பல வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களின் அந்த ஒருசில போட்டிகளை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களை எளிதில் அணியை விட்டும் நீக்கிவிடுகின்றனர். உதாரணத்திற்கு வாசிம் ஜாபர் என்ற கிரிக்கெட் வீரரை நம் அனைவரும் எங்காவது ஒரு இடத்தில கேள்விபட்டிருப்போம். இந்திய அளவில் முதல்தர போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர் தான். ஆனால் இவர் இந்தியாவிற்காக வெறும் 31 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் 11 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதமும் விளாசியுள்ளார். இருந்தாலும் இவர் ஒருசில காரணங்களால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் இவருக்கு இந்திய அணியிலிருந்து அழைப்பே வரவில்லை. கடைசி வரை உள்ளூர் போட்டிகளிலே விளையாடி ஓய்வு பெற்று விட்டார். இதனைப்போல இந்திய அணியின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் போதிய அளவில் வாய்ப்பு வழங்கப்படாமல் அணியிலிருந்து நீக்கப்பட்ட டாப்-3 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3) மனோஜ் திவாரி
மனோஜ் திவாரி இந்தியாவின் முதல்தர போட்டிகளில் சிறந்த வீரராக திகழ்பவர். இவர் முதல்தர போட்டிகளில் மட்டும் 8,000 ரன்களை கடந்துள்ளார். இவரின் சராசரி 50.35 ஆகும். இதில் 26 சதங்களும் அடங்கும். ஆனால் இவர் இந்திய அணிக்காக இதுவரை வெறும் 12 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மீண்டும் இவர் இந்திய அணியில் இணையும் பட்சத்தில் இவர் சிறப்பாக விளையாடுவார். ஆனால் அதற்க்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
33 வயதான இவருக்கு இந்திய அணியில் தன் இடத்தினை உறுதி படுத்திக்கொள்வதற்கான போதுமான வாய்ப்பு வழங்கப்படாமலே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் ஐபிஎல் தொடரில் கூட பல்வேறு அணிகளுக்காக விளையாடி தனது திறமையை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். இவரை போன்ற தரமான வீரர்கள் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்க மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்து பார்க்கலாம்.