ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய 3 இந்திய வீரர்கள்

ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பா

உலகிலேயே மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் லீக் ஐபிஎல். இந்தத் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்ற இளைஞர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இவர்களில் பலர் தேசிய அணியிலும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர். டி-20 வடிவத்தில் மட்டுமல்ல, ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் கூட அணியில் இடம் பெறுகின்றனர். இருப்பினும், இந்திய அணியில் நிலையான இடம் பிடித்தது மிகச் சில வீரர்கள் மட்டுமே.

பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தாலும், அவர்கள் தேசிய அணியில் அதிக ஆதிக்கம் செலுத்த முடியாமல் வாய்ப்பைத் தவறவிட்டனர். ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய 3 இந்திய வீரர்கள் பற்றி இங்குக் காண்போம்.

# 1 ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா ஐபிஎல்-ல் அனைத்து அனுபவமும் உடைய வீரர்களில் ஒருவராக உள்ளார். மேலும் அவர் 165 போட்டிகளில் விளையாடியுள்ளார். 33 வயதான இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் விளையாட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. கர்நாடகாவில் பிறந்த இவர் இந்திய அணிக்கு 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். 25.94 சராசரியுடன் 934 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 90.59 ஆகும். உத்தப்பா 2006-ல் தனது முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்றார். ஜிம்பாவேக்கு எதிராக 2015-ல் தனது கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

வலது கை பேட்ஸ்மேனான உத்தப்பா ஐபிஎல்-லில் ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாடிவருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு முக்கிய வீரராக உள்ளார். மேலும் வரவிருக்கும் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெர்சியில் பார்க்கப்படுவார். ஐபிஎல் போட்டியில் 4129 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 28.67 சராசரியை கொண்டுள்ளார். இந்தச் சராசரி தேசிய ஒருநாள் போட்டியின் சராசரியை விட அதிகம். மேலும் ஐபிஎல் 5-வது தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பெற்றார். வரும் ஐபிஎல் தொடரில் 6.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரைத் தக்க வைத்துக்கொண்டது. இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுவார்.

# 2 விரித்திமான் சாஹா

விரித்திமான் சாஹா
விரித்திமான் சாஹா

விரித்திமான் சாஹாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவின் விளிம்பில் உள்ளது. சட்டிஸ்கர்லிருந்து வந்த திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், உண்மையில் இந்திய ஒருநாள் அணியில் அவரது இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் எம்.எஸ்.தோனியின் எல்லையற்ற தலைமைத்தன்மை மற்றும் இப்போது ரிஷப் பன்ட் என்ற இளம் வீரரின் அதிரடியான ஆட்டம் காரணமாக இவர் தனது வாய்ப்பை இழந்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராகத் தனது கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 09, 2014 அன்று விளையாடினார். இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் சராசரி 13.67 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 73.21. மறுபுறத்தில், அவர் எப்போதும் ஐபிஎல்-லின் முக்கிய அங்கமாக இருந்தார், 115 போட்டிகளில் விளையாடினார். மொத்தம் 1679 ரன்கள்; சராசரியாக 24.33 மற்றும் 129.85 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். இருப்பினும், விக்கெட் கீப்பராக இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 கேட்சுகளை எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பராகவும் உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவற்றின் ஜெர்சியை அணிந்த இவர் ஐ.பி.எல். 2019-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணி 1.20 கோடிக்கு சாஹாவை எடுத்துள்ளது.

# 3 மோஹித் ஷர்மா

மோஹித் ஷர்மா
மோஹித் ஷர்மா

ஐபிஎல் போட்டியில் மோகித் சர்மா ஒரு சக்தியாக உள்ளார். இருப்பினும், ஹரியானாவிலிருந்து வந்த 30 வயதான இவர் இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தைப் தக்கவைக்க முடியாமல் போனது. ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடும் அணிக்கு முக்கிய வீரராக இருந்து வந்தார். அவரின் லைன் மற்றும் லென்த் பந்து வீச்சு முக்கியான ஒன்று.

இந்திய முகாமில் முக்கிய வீரர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இருந்து வரும் நிலையில் மோகித் சர்மா பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. ஐபிஎல்-ல் 84 போட்டிகளில் விளையாடிய மோஹித் 90 விக்கெட்டுகளையும் 8.4 எக்னாமி ரேட் மற்றும் 26.64 சராசரியும் கொண்டுள்ளார். இந்தியா அணிக்காக விளையாடிய 26 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகள், 5.46 எக்னாமி ரேட் மற்றும் 32.9 சராசரி.

2019 ஐ.பி.எல். ஏலத்தில் அடிப்படை விலையான 50 லட்சத்திலிருந்து 10 மடங்கு விலையான 5 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மோஹித் ஷர்மாவை எடுத்துள்ளது.

Quick Links

App download animated image Get the free App now