கிரிக்கெட் விளையாட்டானது இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள கொண்டுள்ள நாடாகும்.1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்ற பிறகு மேலும் கிரிக்கெட் விளையாட்டானது இந்தியாவில் அதிக புகழ்பெற்றது.இந்திய அணியில் அதிக உள்ளுர் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.இந்திய ஆடும் XI ல் இடம்பெற அணியில் வீரரின் அர்பணிப்பு, வீரரின் மனநிலை, மற்றும் கடின உழைப்பு சீராக இருத்தல் வேண்டும்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது வீரர்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த மட்டுமல்லாமல் நிறைய இளம் வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்த பெரிதும் உதவுகிறது.ஐபிஎல் மூலம் நிறைய இளம் வீரர்களை சர்வதேச அணிகளில் தற்சமயம் காண முடிகிறது.உள்ளுர் கிரிக்கெட்டில் சீரான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் தானக சர்வதேச அணியில் தனக்கென ஒரு இடத்தை இந்திய வீரர்கள் பிடித்துவிடுகின்றனர்.
நாம் இங்கு தனது கடின உழைப்பால் இந்திய அணியில் இடம்பிடித்து அந்த இடத்தினை தக்கவைக்க முடியாமல் ஒரேயொரு ஒருநாள் போட்டியுடன் இந்திய அணியிலிருந்து வெளியேறிய 3 இந்திய வீரர்கள்.
#3.பன்கஜ் சிங்
பன்கஜ் சிங் 2004 ரஞ்சிக்கோப்பையில் ராஜஸ்தான் அணியில் அறிமுகமானார்.2006ஆம் ஆண்டு ரஞ்சிகோப்பையில் லீக் சுற்றில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 20.2 சராசரியை பெற்று சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்.
உத்திரப்பிரதேசத்தில் பிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பங்கச் சிங் 2010 ஆம் ஆண்டு ஹாரரேவில் நடைபெற்ற இலங்கைக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.ஆனால் அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் அவருக்கு கொடுக்கப்பட்ட 7 ஓவரிலும் விக்கெட் வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கி வந்தார்.அப்போட்டிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.
உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் கடினமான ஆடுகளங்களில் பங்கஜ் சிங் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.பங்கச் சிங் 17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி 9.33 சராசரியை வைத்துள்ளார்.சர்வதேச போட்டியில் கிடைத்த ஒரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கொள்ளாமையால் அதற்கு மேல் இந்திய அணியில் களம் காண முடியவில்லை.
#2.நமன் ஓஜா
இரண்டாவது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகி தனது முதல் போட்டியிலேயே அரை சதத்தை அடித்து கிரிக்கெட் தேர்வாளர்களை தம் கவனத்தில் ஈர்த்தார் நமன் ஓஜா உள்ளுர் போட்டிகளில் மத்தியப்பிரதேச மாநிலத்து அணியில் விளையாடி 9000 ரன்களை குவித்துள்ளார்.
வலது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான நமன் ஓஜா 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.ஆனால் அவர் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்ததால் உடனடியாக அணியை விட்டு நீக்கப்பட்டார்.
நமன் ஓஜா பல ஐபிஎல் போட்டிகளில் தனது அற்புதமான ஆட்டத்தால் வெற்றியை தேடித்தந்துள்ளார்.ஆனால் அந்த ஒரு சர்வதேச போட்டிக்குப்பிறகு அவரால் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற முடியாமலேயே போனது.
#1.பர்வேஜ் ரசுல்
பர்வேஜ் ரசுல் 2008 ஆம் ஆண்டு உள்ளுர் கிரிக்கெட்டில் ஜம்மு காஷ்மீர் அணியில் அறிமுகமாகி இன்றுவரை சிறந்த வீரராக திகழ்கிறார்.2012-13 ஆம் ஆண்டின் ரஞ்சிக்கோப்பையில் 594 ரன்களையும் 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் சர்வதேச அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ஆல்ரவுண்டரான இவர் உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சர்வதேச ஒருநாள் அணியில் பர்வேஜ் ரசுலுக்கு இடம் கிடைத்தது.2014ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கெதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார்.இவர் இந்த போட்டியில் பங்கேற்று 60 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டிக்குப் பிறகு அவர் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
எழுத்து : விஷால் சிங்
மொழியாக்கம்: சதீஸ்குமார்