ஒவ்வொரு தரப்பிலும் படைக்கப்படும் பல்வேறு சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும். இதில் தங்களது பெயர் இடம் பெறாதா என நம்மில் பலர் ஏங்கியது உண்டு. ஆனால் இதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. விளையாட்டு துறையை பொறுத்தவரில் பல வீரர்கள் தங்களது அசாத்திய திறமையின் காரணத்தினால் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் படைக்கப்படும் சாதனைகள் அனைத்தும் நிரந்தரமானதல்ல கூடிய விரைவிலேயே வேறொரு நபரால் இதில் பெரும்பாலான சாதனைகள் முறியடிக்கப்படும். அந்தவகையில் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களால் படைக்கப்பட்ட மூன்று சாதனைகளை பற்று இந்த தொகுப்பில் காணலாம்.
#3) மகேந்திர சிங் தோனி ( விலையுயர்ந்த பேட் வைத்திருந்தவர் )
இந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஒரு விசித்திர சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். 2011 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டில் அவர் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்த பேட் ஆனது ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலமானது தோனியால் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்டது. மிகவும் புகழ் பெற்ற இந்த பேட்டை வாங்குவதற்கு பலர் வந்தனர். இறுதியில் ஆர்.கே குளோபல் நிறுவனமானது இந்த பேட்டை 161,295 டாலருக்கு ஏலத்தில் எடுத்து. இதன் மூலம் உலகின் மிகவும் அதிக விலைக்கு ஏலத்துக்கு போன பேட் என்ற சாதனையை தோனியின் பேட் படைத்தது. இதன் மூலம் பெறப்பட்ட தொகையை இந்தியாவில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு தோனி வழங்கினார்.
#2) ராஜ் மகாராஜ் சிங் ( வயதான முதல்தர போட்டியாளர் )
இந்த பட்டியலில் இவர் படைத்துள்ள சாதனையை பார்த்தால் நம் அனைவருக்கும் வியப்பாக இருக்கும். ஆம் மும்பை நகரின் கவர்னராக இருந்த இவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது நீண்ட கால கனவு. ஆனால் இதனை அடைய முடியாமலேயே தனது வாலிபத்தை இழந்தார் இவர். இருந்தாலும் சோர்வடையாமல் தனது 72 வயதில் முதல் தர போட்டிகளில் அறிமுகமானார்.
அப்போது இந்த போட்டியானது கவர்னரின் அணிக்கும் காமன் வெல்த் அணிக்கும் இடையே நடைபெற்றது. அந்த போட்டியில் 9 வது வீரராக களமிறங்கிய இவர் வெறும் 4 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தார்.
#1) விராக் மாரே ( அதிக நேரம் கிரிக்கெட் விளையாடியவர் )
மும்பையை சேர்ந்த இவர் கிரிக்கெட்டின் மீது கொண்ட அபரிமிதமான ஆர்வத்தால் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளார். இவர் தனது 24 வயதிலேயே கின்னஸ் சாதனை படைத்தது அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். இவர் 2015 ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார். இவர் தொடர்ந்து அதிக நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டதால் மூலம் இந்த சாதனையை படைத்தார். அதாவது அதாவது தொடர்ந்து 3 நாட்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் இவர். தூக்கமில்லாமல், உணவு இல்லாமல் இவர் படைத்த இந்த வித்தியாசமான சாதனையை இன்றளவும் வேறுயாராலும் முறியடிக்க முடியாததாகஉள்ளது. அதாவது மொத்தம் இவர் 2,447 ஓவர்கள், 14,682 பந்துகளை சந்தித்து 50 மணி நேரம் இடைவிடாமல் விளையாடியுள்ளார்.