கிரிக்கெட் விளையாட்டானது தற்போது உலக அளவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. தற்போது ஐசிசி 12 நாட்டு அணிகளுக்கு முழு கிரிக்கெட் அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. உலகில் கால்பந்திற்குப் பிறகு அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் திகழ்கிறது. ஐசிசி உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கிரிக்கெட் விளையாட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் ஐசிசி 2019 உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே விளையாட தகுதி பெற்றுள்ளது. மற்ற அணிகள் தகுதி சுற்று நடத்தப்பட்டதில் மோசமான ஆட்டத்தால் வெளியேறியது. இவ்வாறு தகுதி சுற்று நடத்துவது கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. குறைந்தது 20 அணிகளாவது இருந்தால தான் உலககோப்பை தொடர் பரபரப்பாக இருக்கும். என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
நெதர்லாந்து, அயர்லாந்து , ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தில் ,மே 30ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்க இயலவில்லை.ஆனால் இந்த அணிகள் முந்தைய உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி-யின் புதிய விதிப்படி உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று உள்ளது.
தரவரிசையில் கடைநிலையில் உள்ள சில அணிகளிலும் சில சிறந்த வீரர்கள் உள்ளனர். அத்தகைய சிறப்பான வீரர்களுக்கு உலகக் கோப்பை தொடர்களில் சிறந்த அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. ஐசிசி தரவரிசையில் கடைநிலை அணிகளில் உள்ள சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சில சிறப்பான சாதனைகளை தன்வசம் இன்று வரை வைத்துள்ளனர். அவ்வாறு உள்ள 3 வீரர்களை பற்றி நாம் காண்போம்.
#1.கெவின் ஓ பிரைன் : உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம்

இதுவரை 11 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்று உள்ளது. நிறைய கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரில் வெளிபடுத்தியுள்ளனர். ஆனால் யாரும் அதிவேகமாக சதத்தை விளாசியது கிடையாது. உலககோப்பை வரலாற்றில் முதல் முறையாக அயர்லாந்தை சேர்ந்த கெவின் ஓ பிரைன் தான் முதன் முதலாக உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்தார். 2011 உலகக் கோப்பையில் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்த போட்டியில் இவர் மொத்தமாக 63 பந்துகளை பிடித்து 13 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 113 ரன்களை அடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து நிர்ணயித்த 327 ரன்களை எளிதாக அயர்லாந்து அடைந்தது. உலகக் கோப்பை தொடரில் இந்த சாதனையை இதற்கு முன் மேதிவ் ஹாய்டன் வசம் இருந்தது. இவர் 2007 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 66 பந்துகளை எதிர்கொண்டு சதமடித்தார்.
கெவின் ஓ பிரைன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே பாகிஸ்தானிற்கு எதிராக சதமடித்து ஒரு வரலாற்று சாதனையை வைத்துள்ளார். கடந்த வருடத்தில் ஐசிசி ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் டெஸ்ட் அந்தஸ்து அளித்தது. இதில் அறிமுக போட்டியில் அயர்லாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த வரலாற்று டெஸ்ட் போட்டியில் கெவின் ஓ பிரைன் சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#2. ரைன் டென் டோஸ்சேட்: ஒருநாள் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1500 ரன்களை குவித்து 67 என்ற அதிக சராசரியுடன் சாதனை படைத்துள்ள பேட்ஸ்மேன் நெதர்லாந்தை சேர்ந்த ரைன் டென் டோஸ்சேட். இவருக்கு பிறகு இந்த சாதனை பட்டியலில் இமாம்-உல்-ஹக் 60.55 உடன் 2வது இடத்திலும் , விராட் கோலி 59.50 உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
ரைன் டென் டோஸ்சேட் 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் 32 சர்வதேச இன்னிங்ஸ் விளையாடி 1541 ரன்களை குவித்துள்ளார். இவர் 5 சர்வதேச சதங்களையும் , 9 சர்வதேச அரைசதங்களையும் விளாசியுள்ளார். இதில் இங்கிலாந்திற்கு எதிராக ஒரு சதமும் , தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு அரைசதமும் அடங்கும்.
இவர் அவ்வளவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது இல்லை. உள்ளுர் மற்றும் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் இவரது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். இவர் இஸ்ஸேக்ஸ் எனப்படும் ஆங்கில கவுண்டி அணியிலும் விளையாடி வந்தார். இவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 10,283 ரன்களையும், லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டிகளில் 5826 ரன்களையும் குவித்துள்ளார். ரைன் டென் டோஸ்சேட் இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியிலும் விளையாடியுள்ளார்.
#1.ரஷீத் கான் : ஒருநாள் போட்டிகளில் அதிக பௌலிங் சராசரி

ரஷீத் கான் கிரிக்கெட் உலகில் அசர வளர்ச்சி அடைந்து வருகிறார்.உலகெங்கும் நடைபெற்று வரும் டி20 லீக் தொடரில் தனது சிறப்பான லெக் ஸ்பின்னால் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முழு திறமையை உலகெங்கும் நிருபித்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்கும் போது, ஓடிஐ போட்டிகளில் ரஷீத் கான் சிறப்பாக விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பௌலிங் சராசரியை வைத்துள்ளார்.இவர் இதுவரை 50 சர்வதேச போட்டிகளில் விளையாடி 14.47 சராசரியுடன் 118 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓடிஐ கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் 22.2ஆகவும், 3.90 என்ற சிறப்பான எகானமி ரேட்டையும் ஆப்கானிஸ்தான் ஸ்டார் ரஷித்கான் வைத்துள்ளார்.
இவரது பௌலிங் எதிரணி யாரக இருந்தாலும் சரி , எந்த இடமாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாக இருக்கும். இவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியது இல்லை. ஆனால் கிடைத்த சிறிய வாய்ப்பை பயன்படுத்தி மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளார் ரஷித்கான்.
2018ல் நடந்த ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளில் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் இவரது பௌலிங்கில் தடுமாறினர். ரஷீத் கான் 2018 ஆசிய கோப்பை தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்று 17.20 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் இந்த தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 27.7ஆகவும், எகானமி ரேட் 3.72ஆகவும் இருந்தது.