ஆஸ்திரேலியா  டி20 தொடரில் 3 புதிய மைல்கல்லை அடைய காத்திருக்கும் விராட் கோலி

Virat Kohli
Virat Kohli

இந்தியா ஆஸ்திரேலியாவை இன்று டி20யில் சந்திக்கிறது .முதல் டி20 பிரிஸ்பேனில் உள்ள கபா ஆடுகளத்தில் நடைபெறுகிறது . இத்தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியிடமிருந்து நிறைய எதிர்பாக்கின்றனர் .

விராட் கோலி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது . அவர் மறுபடியும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டி20 போட்டிகளில் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு கூடுதல் பலமாகும். கடந்த 3 வருடமாக விராட் கோலி சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளார். எனவே இதே ஆட்டத்திறன் ஆஸ்திரேலியாவிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

விராட் கோலி ஆஸ்திரேலியா டி20 தொடரில் 3 புதிய மைல்கல்லை அடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளார். அதைப் பற்றி நாம் இங்கு காண்போம்.

#1.சர்வதேச டி20களில் அதிக ரன்கள்

கோலி சர்வதேச டி20யில் 2102 ரன்களை எடுத்துள்ளார். நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்டின் கப்டில் 2271 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும் ரோஹித் சர்மா 2201 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி ஆஸ்திரேலியா டி20 தொடரில் முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் முதல் இடத்திற்கு விராட் கோலியை விட ஒபனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது . விராட் கோலிக்கு இது ஒரு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த இந்திய பேட்ஸ்மேன் முதல் இடத்தை பிடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

#2.டி20யில் அதிக பவுண்டரிகள்

விராட்கோலி டி20யில் தற்போது 214 பவுண்டரிகளை விளாசியுள்ளார். தில்ஷான் தனது கிரிக்கெட் வாழ்நாட்களில் டி20யில் 223 பவுண்டரிகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஹ்மத் ஷாஜாத் 218 பவுண்டரிகளை அடித்து 2வது இடத்தில் உள்ளார் .

விராட் கோலி முதல் இடத்திற்கு வர இன்னும் 9 பவுண்டரிகளே தேவைப்படுகிறது. தில்ஷான் ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அஹ்மத் ஷாஜாத் இனி டி20 போட்டிகள் விளையாட குறைவான வாய்ப்புகளே உள்ளது.எனவே விராட் கோலிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

#3.டி20யில் முதல் சதம் மற்றும் 50வது சிக்சர்

விராட் கோலி இதுவரை சர்வதேச டி20யில் 18 அரைசதங்களை விளாசியுள்ளார். இதுவே சர்வதேச டி20யில் தனி வீரர் ஒருவரின் அதிகபட்ச அரைசதங்களாகும். இருந்தபோதிலும் சர்வதேச டி20யில் இன்னும் ஒரு சதத்தினை கூட கோலி அடித்ததில்லை. அவர் டி20யில் 2016ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 90 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ரன்களாக இதுவரை உள்ளது.

விராட் கோலி ஆஸ்திரேலியா டி20 தொடரில் தனது முதல் சதத்தினை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் டி20யில் தற்போது 46 சிக்சர்களை விளாசியுள்ளார் . எனவே இத்தொடரில் தனது 50 வது சிக்சரினை எட்டுவார் எனத் தெரிகிறது. இவருக்கு முன் 3 இந்திய வீரர்கள் மட்டுமே டி20யில் 50க்கு மேல் சிக்சர்களை விளாசியுள்ளனர் . இவர் 4வது வீரராக இச்சாதனையில் இனைவார் .

எழுத்து : சத்யா விராட்

மொழியாக்கம்: சதீஸ்குமார்

Quick Links