கிரிக்கெட்டானது இந்தியாவில் மிக முக்கியமான விளையாட்டுகளுள் ஒன்றாகும். பொதுவாக இந்தியாவில் "விளையாட்டு" என்பது சிறுவயது முதலே தகுந்த வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் மற்றும் வசதிகள் செய்து கொடுத்து அவர்களை மிகப்பெரிய சர்வதேச வீரர்களாக மாற்றமடைய செய்வதே ஆகும்.
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் மிகவும் கஷ்டப்பட்டு, உள்ளுர் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தான் சர்வதேச அணிகளில் இடம்பெருகின்றனர்.
அப்படி இடம்பெற்றாலும் ஒருசிலருக்கு அது சரியாக அமையாது. தங்களது முதல் போட்டிகளிலேயே சொதப்பி தேர்வாளர்களின் எதிர்பார்பை நிறைவு செய்ய மாட்டார்கள். சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி போன்றோர் தங்களது முதல் சர்வதேச போட்டிகளில் சுழியத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியவர்கள் தான். ஆனால் தற்போது டாப் ரன் ஸ்கோரர்களாக உள்ளனர்.
இதேபோல் ஒரு நல்ல அணியை உருவாக்குவது தேர்வாளர்களின் கையில் மட்டும் இல்லை. அந்த அணிகளின் கேப்டன்கள் கையில் தான் உள்ளது. எந்தவொரு அணியும் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் சிறந்த அணியாக இருந்ததில்லை. ஏதேனும் ஒரு காலங்களில் சிறந்த வீரர்கள் எதிர்பாரத விதமாக அமைந்து, சிறப்பாக அணியை வழிநடத்தி செல்வார்கள். அதேபோல் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு அணியை சிறப்பாக வழிநடத்திய 3 முக்கிய இந்திய கேப்டன்களை பற்றி காண்போம்.
#3.கபில் தேவ் - 1980ன் ஆரம்ப காலங்களில்
1983ல் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. 1980 ல் இந்திய அணி டாப் அணிகளுக்கு ஒரு போட்டியளராக இருக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய அணியெல்லாம் கிடையாது.
அக்காலங்களில் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள்தான் சிறந்த அணிகளாக அனைவராலும் போற்றப்பட்டது. ஆனால் கபில்தேவ் அந்த நம்பிக்கையை முற்றிலும் மாற்றியமைத்தார்.
1983 உலகக் கோப்பையில் சிறப்பாக அணியை வழிநடத்தி அதுவரை மிகப்பெரிய கிரிக்கெட் அணிகளாக இருந்த அணிகளை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றி காட்டினார். இந்த உலகக் கோப்பை வெற்றியின் மூலம் அதுவரை ஆதரவு எதுவும் இல்லா இந்திய அணிக்கு அனைத்தும் தானக தேடி வந்தது.
இந்த நிகழ்வு தான் கிரிக்கெட் இந்தியாவில் மேன்மேலும் வளர உறுதுணையாக இருந்தது.
#2.கங்குலி - 1990 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2000 ஆம் ஆண்டின் தொடக்கம்
கபில் தேவ் சகாப்தம் 10 வருடங்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு அமைந்தது. பின் கங்குலி 1990 ன் இறுதியிலிருந்து 2000 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தினார்.
கங்குலியின் சிறந்த கேப்டன்ஷிப் மற்றும் ஆடுகளத்தில் விளாசும் அனல் பறக்கும் ரன்கள் ஆகியவையே இவரை உலகறியச் செய்தது. கேப்டனாக இவரது அணுகுமுறை சிறப்பாக இருக்கும்.இவரது ஆடின காலத்தில் அதிக சாதனைகளை இந்திய அணி படைக்க பெரிதும் காரணமாக இருந்தவர்.
இவரது வெற்றிக்கு காரணம் என்னவென்று கேட்டால் அவர் சொல்வது "என்னுடைய அணியின் மீது உள்ள முழு நம்பிக்கைதான்" என பெருமையையுடன் கூறுவார். கங்குலி தனது அணியினரிடம் ஒரு நண்பராகவே பழகுவார். அணியின் தோல்விக்கு வீரர்களை ஒருபோதும் காரணமாக சொல்ல மாட்டார்.
#1. எம்.எஸ்.தோனி. (2007 முதல் 2014 வரை)
தோனியின் சகாப்தம் கபில்தேவ் மற்றும் கங்குலியின் சகாபதங்களை சார்ந்தே அமையும். தோனியின் சகாப்தத்தில் நிறைய வெற்றிகள் குவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தோனியின் கேப்டன் நியமனத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை அனுபவமில்லாத இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை கைப்பற்றி அனைவரின் விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார் தோனி.
இதே வெற்றியுடன் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் தனது கேப்டன்ஷிப்பை சிறப்பாக செயல்படுத்தி இந்திய அணியை அடுத்த லெவலிற்கு கொண்டு சென்றார் தோனி. கடினமான சமயங்களில் எப்படி விளையாடுவது மற்றும் அணியை வழிநடத்துவதைப் பற்றி மற்ற வீரர்கள் இவரிடம் கற்றுக்கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்படுவார். இவரது சகாப்தத்தில் தான் ஐசிசி யின் முக்கிய தொடர்களான டி20 உலக்கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற கோப்பைகளை இந்திய அணி குவித்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் தோனி.
இந்திய அணி இதுவரை பெற்றுள்ள பெருமைகள் மற்றும் சாதனைகள் என அனைத்திலும் கபில்தேவ், கங்குலி, தோனி ஆகிய மூன்று பேருக்கும் முக்கிய பங்கு உள்ளது. கிரிக்கெட் உள்ள வரை இவர்களது புகழ் என்றும் அழியாது.
எழுத்து : கொஷிமா அல்யாமனி
மொழியாக்கம் : சதிஷ் குமார்