பன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 21 முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த உலகக் கோப்பை தொடரின் சாம்பியனாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் வெல்வதற்கு தகுதியானவை என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர். மேலும், வெஸ்ட் இண்டீஸ் எந்நேரத்திலும் ஆச்சரியமளிக்கும் வகையில் வகையில் செயல்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் முதல் இரு முறை வெஸ்ட் இண்டீஸ் இண்டீஸ் அணியும் அதன் பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளும் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளன. அவற்றில் குறிப்பிடும் வகையில், ஆஸ்திரேலிய அணி 5 சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளது. இதுவரை முடிந்துள்ளன 11 உலக கோப்பை தொடர்களில் பல்வேறு அணிகளும் இடம்பெற்று தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றில், பல தரப்பு சாதனைகளும் பதிவாகியுள்ள சாதனைகளில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அறிந்திராத மூன்று சுவாரசியமான சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.உலக கோப்பை போட்டியில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த கனடா:
ஒவ்வொரு போட்டியிலும் அணியின் சிறந்த வீரர் குறைந்தது 40 முதல் 50 ரன்களை குவிக்க முற்படுவர். இருப்பினும். கடந்த 2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பங்கேற்ற கனடா அணியின் 11 பேட்ஸ்மேன்கள் மற்றும் உதிரிகள் உட்பட ஒட்டுமொத்தமாகவே 36 ரன்களை மட்டுமே குவித்திருந்தது. அணியில் இடம்பெற்ற ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கை தொடவில்லை. அணியின் தொடக்க வீரர் சம்னி மற்றும் கேப்டன் ஹாரிஸ் ஆகியோர் தலா 9 ரன்களைக் குவித்தது தனிநபர் அதிகபட்ச ரன்களாக பதிவாகின. கருணையின்றி பந்துவீசிய இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களான சமிந்தா வாஸ், பிரபாத், முத்தையா முரளிதரன் மற்றும் பெர்னாண்டோ ஆகியோரின் கூட்டு முயற்சியால் 19 ஓவர்களுக்குள் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது, கனடா அணி. இலங்கை அணியின் பிரபாத் நிசங்க 7 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் ஓவர் உட்பட 12 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் பின்னர், களமிறங்கிய இலங்கை அணி வெறும் 4.4 ஓவர்களில் அட்டப்பட்டுவின் அதிரடியுடன் 37 என்ற இலக்கை வெற்றிகரமாக அடைந்தது சிறப்பான பந்து வீச்சு தாக்குதலை வெளிப்படுத்திய பிரபாத் ஆட்டநாயகனாக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
#2.உலக கோப்பை போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட இலக்கை மும்முறை சேசிங் செய்த ஒரே அணி எனும் சாதனை படைத்த அயர்லாந்து:
ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் சிலமுறை தொடரின் பலமான அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அதிர்ச்சி அளித்த அணியாக வலம் வந்துள்ளது, அயர்லாந்து. 2007ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை தொடரில் பங்கேற்று வரும் அயர்லாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான குரூப் சுற்றில் தனது ஆதிக்கத்தை செலுத்தி முதல்முறையாக அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர், சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்து தோல்வியடைந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் போனது. அடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் முறையாக ஆட்டத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அயர்லாந்து அந்த அணியின் ஆல்ரவுண்டரான கெவின் ஓ பிரையன் அதிவேகமாக சதம் அடித்து 327 என்ற பெரும் இலக்கினை எட்ட உதவி பெரும் பங்காற்றினார். அதன் பின்பு, சில நாட்களிலேயே கொல்கத்தாவில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் 300க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்தது அயர்லாந்து முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி ரையான் டென் டஸ்சேட்டே சதத்தின் உதவியோடு 306 ரன்கள் குவித்தது. அதன் பின்னர், களமிறங்கிய அயர்லாந்து 47.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரிலும் கூட இரு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்திருந்தது, அயர்லாந்து அணி. இந்த போட்டியில் மீண்டும் ஒருமுறை பால் ஸ்டெர்லிங் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் குவித்து 304 என்ற ஸ்கோரை எட்ட உதவினார். எனவே, பல்வேறு உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அயர்லாந்து அணி பலமிக்க ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியை போலவே சிறப்பாக செயல்பட்டு உள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த அணி 2019 உலகக்கோப்பை தொடரில் இடம் பெறவில்லை.
#1.பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒருமுறைகூட வெற்றி பெறாத இலங்கை மற்றும் நாக்-அவுட் போட்டிகளை தாண்டாத தென் ஆப்பிரிக்கா:
1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது ஆசிய அணியாக உருவெடுத்தது, இலங்கை. உலக கோப்பை போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் அதன் எதிரிகளை ஏதேனும் ஒரு போட்டியிலாவது வீழ்த்தி இருக்கும். அந்த வகையில், இலங்கை அணி ஒருமுறைகூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்றதில்லை. அதேபோல், தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் கூட பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதற்கு முன்னர் ஏழுமுறை இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் பாகிஸ்தான் அணியே வெற்றி கண்டுள்ளது. 1975ஆம் ஆண்டு முதல் முதல் 2011 ஆம் ஆண்டு வரை இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் ஒரு முறை கூட ஆட்டத்தின் போக்கு இலங்கை அணிக்கு சாதகமாய் முடியவில்லை.
அதேபோல், உலக கோப்பை தொடர்களில் நாக்-அவுட் போட்டிகளை ஒருமுறைகூட தாண்டாத அணி என்ற மோசமான சாதனையை வைத்திருக்கின்றது, தென்னாப்பிரிக்கா. லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தென்னாப்பிரிக்க அணி நாக் அவுட் போன்ற நெருக்கடி கால போட்டிகளில் ஜொலிப்பதில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இலங்கை அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி தோற்று தொடரிலிருந்து வெளியேறியது, தென்னாப்பிரிக்கா. மேலும், 2015-ல் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தான் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் மற்றும் ஒரே நாக்-அவுட் வெற்றியாகும்.