#1.பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒருமுறைகூட வெற்றி பெறாத இலங்கை மற்றும் நாக்-அவுட் போட்டிகளை தாண்டாத தென் ஆப்பிரிக்கா:
1996ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது ஆசிய அணியாக உருவெடுத்தது, இலங்கை. உலக கோப்பை போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் அதன் எதிரிகளை ஏதேனும் ஒரு போட்டியிலாவது வீழ்த்தி இருக்கும். அந்த வகையில், இலங்கை அணி ஒருமுறைகூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற்றதில்லை. அதேபோல், தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் கூட பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதற்கு முன்னர் ஏழுமுறை இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் பாகிஸ்தான் அணியே வெற்றி கண்டுள்ளது. 1975ஆம் ஆண்டு முதல் முதல் 2011 ஆம் ஆண்டு வரை இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் ஒரு முறை கூட ஆட்டத்தின் போக்கு இலங்கை அணிக்கு சாதகமாய் முடியவில்லை.
அதேபோல், உலக கோப்பை தொடர்களில் நாக்-அவுட் போட்டிகளை ஒருமுறைகூட தாண்டாத அணி என்ற மோசமான சாதனையை வைத்திருக்கின்றது, தென்னாப்பிரிக்கா. லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தென்னாப்பிரிக்க அணி நாக் அவுட் போன்ற நெருக்கடி கால போட்டிகளில் ஜொலிப்பதில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இலங்கை அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி தோற்று தொடரிலிருந்து வெளியேறியது, தென்னாப்பிரிக்கா. மேலும், 2015-ல் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தான் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் மற்றும் ஒரே நாக்-அவுட் வெற்றியாகும்.