#1 சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என சொல்லலாம். 2005ம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் போட்டியில் பங்குபெற்ற ரெய்னா, ஆரம்ப காலத்தில் 5 அல்லது 6ம் இடத்தில களமிறங்கி ஆடிவந்தார். இதனால் இவர் பங்குபெற்ற முதல் 11 போட்டிகளில் 5 முறை மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றார். போதிய வாய்ப்பு கிடைக்காததால் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக விளையாடிய ரெய்னா, இதுவரை 5 ஒரு சர்வதேச சதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக 3ம் வீரராக களமிறங்கும் இவர், விளையாடிய அனைத்து சீசனில் 400 ரங்களுக்கு மேல் ககுவித்து சாதனை படைத்துள்ளார்.
ஆனால் சர்வதேச போட்டிகளில் இவர் நினைத்தது நடக்கவில்லை. தொடர்ந்து 4 அல்லது 5வது வீரராகவே களமிறக்கப்பட்டார். சீனியர் வீரர்களின் ஓய்விற்கு பிறகு டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரெய்னாவிற்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லியின் வளர்ச்சி ஒரு சிறிய தடையாக அமைந்தது. தற்போது உள்ளூர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்து வரும் இவர், தற்போதைய இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெறுவாரா என்பதை காலம் பதில் சொல்லும்.