#1 நோலன் கிளார்க் - 47 வயது 257 நாட்கள்
நோலன் கிளார்க் 1996 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்காக 5 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக பங்கேற்றார். 1996ல் பிப்ரவரி 26 அன்று நடந்த உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அறிமுகமானார். 1996, ஏப்ரல் 5 அன்று நியூசிலாந்திற்கு எதிரான தனது இறுதிப்போட்டியில் விளையாடினார். 1996ல் தான் உலகக்கோப்பையில் நெதர்லாந்து முதல் முறையாக பங்கேற்றது. பார்படாஸில் பிறந்த நோலன் கிளார்க் நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார்.
நோலன் கிளார்க் தனது 47வது வயதில் உலகக்கோப்பை தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் ஜான் டிரைக்கோஸின், அதிக வயதில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. இவர் மிகப்பெரிய ஹிட்டர். உலகக்கோப்பையில் 5 போட்டிகளில் பங்கேற்று 10 சராசரியுடன் 50 ரன்களை விளாசியுள்ளார். நோலன் ஹாங்காங்கின் சூப்பர் 6 தொடரிலும் பங்கேற்றிருந்தார். அத்தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
1996 உலகக்கோப்பை தொடருக்கு நெதர்லாந்து தகுதி பெற்றதற்கு முன்னணி காரணமாக இருந்தவர் நோலன் கிளார்க். 1994 ஐசிசி கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக பிளே ஆஃப் சுற்றில் பெர்முடாவிற்கு எதிராக 121 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2005 அன்று தனது 56 வயதில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பிய இவர் நெதர்லாந்தில் மிகப்பிரபலமான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஆம்ஸ்டர்டேமில் நடக்கும் "ஹோப்டிக்கிளாஸி" என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி 782 ரன்களை குவித்தார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் நெதர்லாந்து இளம் வீரர்களுக்கு பயிற்சியாளராக உள்ளார்.