ஒருநாள் போட்டிகளில் 40+ சராசரி மற்றும் 100+ ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள 3 கிரிக்கெட் வீரர்கள்

Kedar jadhav
Kedar jadhav

கிரிக்கெட் உலகில் சில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். சமீப காலங்களில் ஓடிஐ மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் எப்போதும் சீராகவும் மற்றும் அதிவேகமாக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்களையே கிரிக்கெட் உலகில் அதிகம் விரும்பப்படுகின்றனர். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தும் வீரர்களை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

நாம் இங்கு ஓடிஐ கிரிக்கெட்டில் 40ற்கு மேலாக சராசரி கொண்டுள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் 100+ ஸ்ட்ரைக் கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம். நிகழ்காலத்தை பொறுத்தவரை பார்க்கும் போது இந்த 3 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இதற்கு சரியான வீரர்களாக இருப்பார்கள். அந்த 3 கிரிக்கெட் வீரர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.

#3.கேதார் ஜாதவ்

போட்டிகள் - 51 , ரன்கள் - 967 , சராசரி - 46.04 , ஸ்ட்ரைக் ரேட் - 109.14

இந்திய அணியில் குறைவாக மதிப்பிடப்படும் ஒரே வீரர் கேதார் ஜாதவ். இவர் பேட்டிங் / பௌலிங் என இரண்டிலும் நல்ல பயன்பாடு உள்ள வீரர் . கேதார் ஜாதவ் தற்போது ஒரு முக்கிய வீரராக இந்திய அணியில் உள்ளார். கடினமான நெருக்கடி சமயங்களில் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடையவராக உள்ளார். அத்துடன் அதிவேகமாக ரன்களை குவிக்கும் திறமை பெற்றவராக விளங்குகிறார்.

கேதார் ஜாதவ் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார் .அத்துடன் 40 ற்கும் மேற்ப்பட்ட சராசரியையும் , 100+ ஸ்ட்ரைக் ரேட் என இரண்டையும் சரியான விதத்தில் கொண்டுள்ள அற்புதமான கிரிக்கெட் வீரர். கேதார் ஜாதவ் 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வேற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று அரைசதம் மற்றும் சதங்களை விளாசினார். இவருக்கு 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவ்வளவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிறகு மீண்டும் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் தனது முழு ஆட்டத்திறனையும் சரியாக வெளிப்படுத்தி தன்னை முழுவதுமாக நிறுபித்து உள்ளார். இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகம் காயம் காரணமாகவே இவருக்கு நிறைய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதனையெல்லாம் வீழ்த்தி தனது பிட்னஸை சரியாக வரவழைக்கும் திறனை கொண்டள்ளார். காயம் பல கண்டாலும் கேதார் ஜாதவ் 51 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1000 ரன்களுக்கு பக்கமாக ரன்களை குவித்துள்ளார். கேதார் ஜாதவ் 46க்கும் அதிகமான சராசரியையும் 109ற்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்-டையும் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் கேதார் ஜாதவ் அரைசதம் விளாசினார். தற்போது இந்திய அணி நியூசிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய அணியில் கேதார் ஜாதவ் முக்கிய 5வது பௌலராக திகழ்கிறார். விஜய் சங்கர் இவரது பௌலிங் பார்ட்னராக தற்போது உள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர்களை விளாசி அணியின் ரன்களை உயர்த்தினார். அத்துடன் ரோஸ் டெய்லரின் விக்கெட்டை சரியான முறையில் பந்தை வீசி விக்கெட்டை வீழ்த்தினார்.

#2.ஜானி பேர்ஸ்டோவ்

Johny Bairstow
Johny Bairstow

போட்டிகள் - 54 , ரன்கள் - 2017 , சராசரி - 48.02 , ஸ்ட்ரைக் ரேட் - 104.56

ஜானி பேர்ஸ்டோவ் 2011 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். அவர் தன்னை ஒரு பெரிய கட்டத்தில் நிருபித்தோடு மிருகத்தனமான பேட்டிங்கையும் வெளிபடுத்தினார். 22 வயதுள்ள ஜானி பேர்ஸ்டோவ் இந்திய பௌலர்களின் பந்துவீச்சை ஆடுகளத்தின் அனைத்து பக்கமும் சிதறவிட்டார். அத்துடன் 22 பந்துகளில் 41 ரன்களை அடித்து பெரிய ஹிட்டராக இந்த உலகத்திற்கு தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

இருப்பினும் ஜானி பேர்ஸ்டோவ்-ற்கு அதிகமாக ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னை ஒரு வழக்கமான டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றியமைத்து இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார். 50 ஓவர் கிரிக்கெட்டில் இவருக்கு அளிக்கப்பட்ட வாயப்புகள் மிகவும் குறைவு. ஆனால் சமீப காலமாக தன்னை முழுவதுமாக மெருகேற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது இங்கிலாந்து அணியின் முக்கிய தொடக்க ஆட்டக்காரராக செயல்படுகிறார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறந்த தொடக்க வீரராக இங்கிலாந்து அணியில் திகழ்கிறார்.

2017ஆம் ஆண்டு இவருக்கு ஒருநாள் போட்டிகளில் பெரிய இடைவெளியாக அமைந்தது. ஜானி பேர்ஸ்டோவ் கடைசி 10 இன்னிங்ஸில் 106.80 ஸ்ட்ரைக் ரேட், 3 அரைசதங்கள் 2 சதங்களை குவித்து 534 ரன்களை குவித்துள்ளார். இவர் தனது பழைய ஆட்டத்திறனை 2018 ல் மீண்டும் கொண்டு வந்தார். 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 1025 ரன்களை குவித்து 46.59 சராசரியையும் , 118.22 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார்.

இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்த சர்வதேச ஸ்ட்ரைக் ரேட் 104.56 மற்றும் 48ற்கும் அதிமான சராசரியை வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சராசரி என இரண்டிலும் அருமையாக வைத்துள்ள 3 வீரர்களுள் இவர் ஒரு முக்கிய கிரிக்கெட் வீரர் ஆவார்.

#1.ஏ.பி.டிவில்லியர்ஸ்

AB De villiers
AB De villiers

போட்டிகள்- 228, ரன்கள்- 9577, சராசரி - 53.50, ஸ்ட்ரைக் ரேட் - 101.10

ஏ.பி.டிவில்லியர்ஸிற்கு அறிமுகம் தேவையில்லை. தற்போதைய தலைமுறையின் சிறந்த தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸ். இவர் களமிறங்கினால் அனைவரின் கவனமும் இவரது பேட்டிங்கில் தான் இருக்கும். ஏ.பி.டிவில்லியர்ஸ் கிரிக்கெட் உலகின் ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார்.

கடந்த 15 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் 50ற்கும் மேற்பட்ட சராசரியையும் 100ற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டையும் சரியான விதத்தில் கடைபிடித்து வரும் ஒரே கிரிக்கெட் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ். இதனை இதுவரை யாரும் இவ்வாறு இச்சாதனையை செய்ததில்லை. இவர் 9500 ரன்கள் அடிக்கும் வரையிலும் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை வைத்திருந்தார். உண்மையில் அவரது 25 ஒருநாள் போட்டிகளின் சராசரியே 100ற்கும் அதிமான ஸ்ட்ரைக் ரேட்டாக இருந்தது.

டிவில்லியர்ஸ் 2005ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் ஆரம்பத்தில் அவரால் ஒரு பெரிய தாக்கத்தை கிரிக்கெட்டில் ஏற்படுத்த முடியவில்லை.2007ஆம் ஆண்டு 3 சதங்களை குவித்தார் . 2009ற்குப் பிறகு வருடத்திற்கு ஒரேயொரு சதங்களை மட்டுமே அடித்தார். 2018ஆம் ஆண்டு 3 போட்டிகள் மட்டுமே விளையாடினார். இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு சுவாரசியமான ஓன்றாகும். நிறைய புது புது ஷாட்களை உருவாக்குவதில் வல்லவராக திகழ்கிறார். அத்துடன் எந்த பௌலராக இருந்தாலும் சரி அவர்களது பௌலிங்கில் ஆடுகளத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விளாசும் திறமை கொண்டவராக விளங்குகிறார்.

2018ஆம் ஆண்டில் உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு‌ பெற்றார். இருந்தாலும் உலகெங்கும் நடைபெற்று வரும் டி20 லீக்கில் பங்கேற்று வருகிறார். தென்னாப்பிரிக்க அணியில் ஒரு முக்கிய வீரராக பார்க்கப்பட்டவர் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

Quick Links

App download animated image Get the free App now