#2.ஜானி பேர்ஸ்டோவ்

போட்டிகள் - 54 , ரன்கள் - 2017 , சராசரி - 48.02 , ஸ்ட்ரைக் ரேட் - 104.56
ஜானி பேர்ஸ்டோவ் 2011 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். அவர் தன்னை ஒரு பெரிய கட்டத்தில் நிருபித்தோடு மிருகத்தனமான பேட்டிங்கையும் வெளிபடுத்தினார். 22 வயதுள்ள ஜானி பேர்ஸ்டோவ் இந்திய பௌலர்களின் பந்துவீச்சை ஆடுகளத்தின் அனைத்து பக்கமும் சிதறவிட்டார். அத்துடன் 22 பந்துகளில் 41 ரன்களை அடித்து பெரிய ஹிட்டராக இந்த உலகத்திற்கு தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
இருப்பினும் ஜானி பேர்ஸ்டோவ்-ற்கு அதிகமாக ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னை ஒரு வழக்கமான டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றியமைத்து இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார். 50 ஓவர் கிரிக்கெட்டில் இவருக்கு அளிக்கப்பட்ட வாயப்புகள் மிகவும் குறைவு. ஆனால் சமீப காலமாக தன்னை முழுவதுமாக மெருகேற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது இங்கிலாந்து அணியின் முக்கிய தொடக்க ஆட்டக்காரராக செயல்படுகிறார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறந்த தொடக்க வீரராக இங்கிலாந்து அணியில் திகழ்கிறார்.
2017ஆம் ஆண்டு இவருக்கு ஒருநாள் போட்டிகளில் பெரிய இடைவெளியாக அமைந்தது. ஜானி பேர்ஸ்டோவ் கடைசி 10 இன்னிங்ஸில் 106.80 ஸ்ட்ரைக் ரேட், 3 அரைசதங்கள் 2 சதங்களை குவித்து 534 ரன்களை குவித்துள்ளார். இவர் தனது பழைய ஆட்டத்திறனை 2018 ல் மீண்டும் கொண்டு வந்தார். 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 1025 ரன்களை குவித்து 46.59 சராசரியையும் , 118.22 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார்.
இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்த சர்வதேச ஸ்ட்ரைக் ரேட் 104.56 மற்றும் 48ற்கும் அதிமான சராசரியை வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சராசரி என இரண்டிலும் அருமையாக வைத்துள்ள 3 வீரர்களுள் இவர் ஒரு முக்கிய கிரிக்கெட் வீரர் ஆவார்.