#1.ஏ.பி.டிவில்லியர்ஸ்

போட்டிகள்- 228, ரன்கள்- 9577, சராசரி - 53.50, ஸ்ட்ரைக் ரேட் - 101.10
ஏ.பி.டிவில்லியர்ஸிற்கு அறிமுகம் தேவையில்லை. தற்போதைய தலைமுறையின் சிறந்த தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸ். இவர் களமிறங்கினால் அனைவரின் கவனமும் இவரது பேட்டிங்கில் தான் இருக்கும். ஏ.பி.டிவில்லியர்ஸ் கிரிக்கெட் உலகின் ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார்.
கடந்த 15 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் 50ற்கும் மேற்பட்ட சராசரியையும் 100ற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டையும் சரியான விதத்தில் கடைபிடித்து வரும் ஒரே கிரிக்கெட் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ். இதனை இதுவரை யாரும் இவ்வாறு இச்சாதனையை செய்ததில்லை. இவர் 9500 ரன்கள் அடிக்கும் வரையிலும் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை வைத்திருந்தார். உண்மையில் அவரது 25 ஒருநாள் போட்டிகளின் சராசரியே 100ற்கும் அதிமான ஸ்ட்ரைக் ரேட்டாக இருந்தது.
டிவில்லியர்ஸ் 2005ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் ஆரம்பத்தில் அவரால் ஒரு பெரிய தாக்கத்தை கிரிக்கெட்டில் ஏற்படுத்த முடியவில்லை.2007ஆம் ஆண்டு 3 சதங்களை குவித்தார் . 2009ற்குப் பிறகு வருடத்திற்கு ஒரேயொரு சதங்களை மட்டுமே அடித்தார். 2018ஆம் ஆண்டு 3 போட்டிகள் மட்டுமே விளையாடினார். இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு சுவாரசியமான ஓன்றாகும். நிறைய புது புது ஷாட்களை உருவாக்குவதில் வல்லவராக திகழ்கிறார். அத்துடன் எந்த பௌலராக இருந்தாலும் சரி அவர்களது பௌலிங்கில் ஆடுகளத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விளாசும் திறமை கொண்டவராக விளங்குகிறார்.
2018ஆம் ஆண்டில் உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இருந்தாலும் உலகெங்கும் நடைபெற்று வரும் டி20 லீக்கில் பங்கேற்று வருகிறார். தென்னாப்பிரிக்க அணியில் ஒரு முக்கிய வீரராக பார்க்கப்பட்டவர் ஏ.பி.டிவில்லியர்ஸ்.