டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை சாதரணமாக நினைத்த இந்திய அணியை துவம்சம் செய்து டி20 தொடரை இந்திய மண்ணிலேயே வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றோர் இந்திய அணியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் என்பது இந்த தொடர் இந்திய அணிக்கு புரிய வைத்தது. உள்ளுர் கிரிக்கெட்டில் நன்றாக ஆட்டத்திறன் வெளிபடுத்தும் சில வீரர்களுக்கு ஆஸ்திரேலிய டி20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டு நன்றாக விளையாடும் பட்சத்தில் 2019 உலகக் கோப்பையில் மாற்று வீரர்களாக களமிறக்கலாம் என இந்திய தேர்வுக்குழு திட்டமிட்டிருந்தது.
உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் உலகக் கோப்பை இந்திய அணியில் தங்களது இடத்தை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் பட்சத்தில் உலகக் கோப்பையில் அவர்களது இடம் உறுதி செய்யப்படலாம் என தேர்வுக்குழு கூறியிருந்தது. அவ்வாறு பார்த்தால் குறைந்த வீரர்கள் மட்டுமே நன்றாக விளையாடியுள்ளனர், அதிக வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே இந்த இரு டி20 தொடரில் அளித்துள்ளனர்.
முதல் டி20 போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த இரண்டாவது டி20யிலும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. சில் வீரர்களின் மோசமான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
இந்திய தேர்வுக்குழு 2019 ஓடிஐ உலகக் கோப்பைக்கும், ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பைக்கும் இந்திய அணியை தேர்வு செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய டி20 தொடரை இழந்ததன் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி காண்போம்.
#3.சித்தார்த் கவுல்
சித்தார்த் கவுல் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரு முக்கியமான பந்துவீச்சாளராக சிறப்பாக விளையாடியுள்ளார். இவரது பௌலிங் டெத் ஓவரில் மிகவும் அதிரடியாக இருக்கும். கவுல்-ன் சிறப்பான பந்துவீச்சு எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை சாய்க்கும் வகையில் இருக்கும். இருப்பினும் சர்வதேச டி20யில் இவரது பௌலிங் மிகவும் மோசமானதாக உள்ளது.
கவுல் கடந்த வருடத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார். ஆனால் அவரது மோசமான ஆட்டத்தால் இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். இருப்பினும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார். இரண்டாவது டி20யில் உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கவுலிற்கு ஆடும் XI-ல் வாய்ப்பும் கிடைத்தது.
கவுல் தான் வீசிய முதல் ஓவரை சிறப்பாக வீசி மார்கஸ் ஸ்டாய்னிஸின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்களை தன் பௌலிங்கில் ஆஸ்திரேலிய அணியிடம் அளித்தார். இவர் 3.4 ஓவரில் 45 ரன்களை தன் பௌலிங்கில் கொடுத்ததால் சர்வதேச இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.