#2.ரிஷப் பண்ட்
இளம் வீரரான ரிஷப் பாண்ட் ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் சொதப்பி வருவது இந்திய தேர்வுக்குழுவிற்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கும். ஆனால் ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக உள்ளது.
இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவரது ஐபிஎல் சாதனைகளால் இந்திய ஓடிஐ/டி20 அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் இன்னும் 2019 உலகக் கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்யவில்லை. அத்துடன் டி20யில் மோசமான ஆட்டத்தால் டி20 அணியிலும் இவரது இடம் ஊசலாடிக் கொண்டுள்ளது.
மிகப்பெரிய ஷாட்களை ஆடும் திறமையுள்ள விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-டின் ஆட்டத்திறன் சீராகவும் இல்லை. அத்துடன் இக்கட்டான சூழ்நிலையில் விளையாட மிகவும் பயப்படுகிறார்.
ரிஷப் பண்ட் முதல் டி20யில் தேவையில்லாமல் ரன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தன்னை தானே அவுட் ஆக்கிக் கொண்டார். அதேபோல் இரண்டாவது டி20 போட்டியிலும் முதல் 3 பந்துகளை டாட் வைத்து விட்டு அடுத்து மெதுவாக வந்த பந்தை சாதரணமாக கையாண்டு எதிரணி வீரரிடம் கேட்ச் ஆனார். எனவே அவர் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெறுவதற்கு முன் உள்ளுர் டி20யில் சற்று கவணம் செலுத்துமாறு இந்திய தேர்வுக்குழு அறிவுறுத்துவர்.