#1.உமேஷ் யாதவ்
இந்திய டி20 அணியில் உமேஷ் யாதவின் தேர்வு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. விதர்பா வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய டி20 அணியின் வழக்கமான பௌலர் கிடையாது. இவர் கடைசியாக விளையாடிய டி20 தொடர் இங்கிலாந்து டி20 தொடராகும். உமேஷ் யாதவின் மோசமான பௌலிங்கில் ரன்கள் சற்று அதிகமாக சென்றதால் டி20 அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
உமேஷ் யாதவ் இந்திய ஓடிஐ அணியின் வழக்கமான பந்துவீச்சாளர் கிடையாது. கடந்த வருடத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடினார், அதன்பின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஓடிஐ தொடரில் கழட்டிவிடப்பட்டார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இவரது ஆட்டத்திறனை பொறுத்து 2019 உலகக் கோப்பை இந்திய அணியில் இவரது இடம் உறுதி செய்யப்படும் என தேர்வுக்குழு தெரிவித்திருந்தது. முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணி குறைந்த ரன் இலக்கை துரத்தி கொண்டிருந்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வந்தனர். ஆனால் உமேஷ் யாதவ் பவர்பிளே ஓவரில் தனது பௌலிங்கில் அதிக ரன்களை அளித்ததால் பேட்ஸ்மேன்கள் பிரஸர் இல்லாமல் விளையாடினர்.
இந்திய அணியின் மற்ற பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெத் ஓவரில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வந்தனர். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற கடைசி 6 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச வந்தார். இவரது மோசமான பந்துவீச்சின் காரணமாக ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் 14 ரன்களையும் அடித்து வெற்றி பெற்றது.
இவரது இந்த மோசமான ஆட்டத்தால் இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் இவரது உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் கனவும் தகர்ந்தது.