சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2ஆம் இடத்தை வகித்து வருகிறது. கடைசியாக நடந்த முடிந்த இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா 2011ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கோப்பையை கைப்பற்றியது. மேலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அரை இறுதி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. அதற்கு பின்னர், இந்த ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையில் விளையாட உள்ளது.
ஒவ்வொரு அணியின் வெற்றியும் அந்த அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பால் பெறப்பட்டாலும் பெரும்பாலும் இளம் வீரர்களின் ஆதிக்கம் அவசியமுள்ள ஒன்றாக கருதப்படுகின்றது. எனவேதான் ஒவ்வொரு நாடுகளும் பெரிதும் இளம்வீரர்களுக்கு பெரும்பாலான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. இதனால், அவர்கள் தங்களுடைய திறமை வெளிக்கொணர்வதுடன் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.
தற்போது இனி வரும் காலகட்டங்களில் இந்திய அணிக்காக பல்வேறு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள மூன்று இளம் வீரர்களை பற்றி காணலாம்.
#1. ஸ்ரேயாஸ் அய்யர்:
இக்கட்டான சூழ்நிலையில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர் பிரவின் அமரால் என்னும் பயிற்சியாளரால் முதன்முதலாக பயிற்சி அளிக்கப்பட்டார். 2014 மற்றும் 2015 சீசனில் அற்புதமாக விளையாடியதால் இவரின் திறமையானது வெளிக்கொணரப்பட்டது. இதுவரை 204 இன்னிங்சில் விளையாடியுள்ள இவர் 5,707 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி இவரது ஆவரேஜ் ஆனது 56.90 -ஆக உள்ளது. அதன்பின் 2015ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெயர்ந்தபெற்றார். மேலும் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 439 ரன்களையும், 33.76 ஆவரேஜையும் மற்றும் 128.36 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டிருந்தார்.
ஐபிஎல்- இல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சர்வதேச ஒருநாள் தொடர்களில் நியூசிலாந்து மற்றும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டிகளில் இடம் பெற்றார். தொடக்க போட்டியில் 9 மட்டுமே எடுத்து தடுமாறினாலும் பின்வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 88 ரன்கள் வரையிலும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி ,மூன்று போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது டெல்லி கேப்பிட்டல் கேப்டனாகவும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
#2.ரிஷாப் பன்ட்:
எந்த சூழ்நிலைகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் 21 வயதேயான இந்த இளம் வீரர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தார். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அண்டர் 19 உலக கோப்பை பிரிவில் நல்ல பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய இவர் வெறும் 6 போட்டிகளில் 267 ரன்களை விளாசியுள்ளார். இதில் நமீபியாவிற்கு எதிரான போட்டியில் ஒரு சதத்தையும், நேபாளுக்கு எதிரான போட்டியில் அதிரடியான அரை சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார். மேலும் 2016/17-ஆம் ஆண்டுகளில் , ரஞ்சி கோப்பையில் மகாராஷ்டிரத்திற்கு எதிரான போட்டியில் 308 ரன்கள் எடுத்து சாதனையை பதிவு செய்தார்; இதனால், சர்வதேச போட்டிகளில் மூன்று சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை மூன்றாவது முறையாக பெற்ற இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
பெரும்பாலும் அதிரடி ஆட்டத்தையே எந்த சூழ்நிலையிலும் காண்பிக்கும் இவர் கிறிஸ் கெயில் மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் ஒப்பிடப்படுகிறார். எனவே, இவ்வாறான செயல்திறன் கொண்ட இவர் தொடர்ந்து ரன்களை குவிப்பதன் மூலம் இந்தியாவில் தினேஷ் கார்த்திக் இடத்தை இவர் பிடிக்க இயலும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது மட்டுமன்றி, இந்த ஆண்டில் "2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி எமர்ஜிங் ப்ளேயர் ஆஃப் தி இயர் "விருது பெற்ற இவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.
#3.ப்ரித்வி ஷா:
ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் 546 ரன்கள் (அந்த நேரத்தில் உலக சாதனையை) ஒருமுறை ப்ரித்வி ஷா விளாசியதன் விளைவாக இவர் ஒரு மூத்த சர்வதேச வீரராக விரைவாக உயர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். மேலும் , பல்வேறு போட்டிகளில் சச்சினை போன்று நிறைய சதங்களை விளாசியுள்ளார். 2018 அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில், முதல் சதத்தை அடித்தார். அதுமட்டுமின்றி "தொடர் ஆட்ட நாயகன் "விருதையும் பெற்றுள்ளார். அதன் பின்னர் , இரண்டு போட்டிகளில் (118.5 சராசரியில்) 237 ரன்கள் மொத்தம் திரட்டினார். இவர் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடியுள்ளார்.
இதுவரை திறமையாக விளையாடி வரும் இவர் சரியான வழிகாட்டல் மற்றும் போதுமான வாய்ப்புகள் பெற்று தனது திறமையை நிரூபிப்பதன் மூலம் வருங்காலத்தில் இந்தியாவிற்கு ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் கிடைப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.