ஆஸ்திரேலியா vs இந்தியா 2018-19 : 3 வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ள இந்திய வீரர்கள்

பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல்

அடிலெய்டு டெஸ்டில் அதிரடியாக வெற்றி பெற்ற இந்திய அணி பெர்த் டெஸ்டில் மோசமான தோல்வியை தழுவியது. இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் இந்திய அணி தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருந்தனர் . அத்துடன் விராட் தலைமையிலான இந்திய அணி அந்நிய மண்ணில் சிறப்பாக செயல்படும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பியிருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது சொந்த மண்ணில் பலத்தை நிருபித்தது. அத்துடன் அடுத்து நடைபெறவுள்ள மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.

பெர்த் டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1 - 1 என சமன் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது தொடரை வென்று விடலாம் என்ற முழு நம்பிக்கை வந்துவிட்டது . இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறுகளை ஆஸ்திரேலிய அணி சரியாக பயன்படுத்தி பெர்த் டெஸ்டில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சில சிறப்பான இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருந்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு சரியாக வாய்ப்பளிக்கவில்லை . தற்போதைய இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு அந்நிய மண்ணில் பலமுறை வாய்ப்பளித்தும் அவர்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்லலாம் . இருவரும் இந்திய அணியில் தங்களது பங்களிப்பை சரியாக அளிக்கவில்லை. எனவே இனிவரும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களை மாற்ற அதிக வாய்ப்புள்ளது. தற்போது காயத்தினால் அவதிப்பட்டு வந்த பிரித்வி ஷா-ற்கு பதிலாக மயான்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்து நடைபெறவுள்ள மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்களை பற்றி காண்போம்.

#1.மயான்க் அகர்வால்

மயான்க் அகர்வால்
மயான்க் அகர்வால்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரரான மயான்க் அகர்வால் உள்ளுர் கிரிக்கெட்டில் கடந்த இரு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்ததன் காரணமாக தற்போது மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது . இவர் ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் ஆடும் XIல் இடம்பெறவில்லை . அதன் பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இவர் கழட்டிவிடப்பட்டார். பின்னர் தற்போது 3வது டெஸ்ட்டில் பிரித்வி ஷா-ற்கு பதிலாக இந்திய அணியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார்.

மயான்க் அகர்வால் இந்த இந்த அற்புதமான வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது . இவர் ராகுலிற்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக இந்திய டெஸ்ட் அணியில் 3வது டெஸ்ட்டில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

இவர் உள்ளுர் கிரிக்கெட் தொடரில் மட்டுமல்லாமல் அந்நிய மண்ணில் இந்திய-ஏ அணியில் இடம்பெற்றும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#2.பார்த்திவ் படேல்

பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல்

இந்திய அணியின் தற்போதைய முதுபெரும் தொடக்க ஆட்டக்காரரான பார்த்திவ் படேல் மெல்போர்ன் டெஸ்டில் மயான்க் அகர்வால்-வுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இவர். 2004ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது 19வயது இளம் வீரராக இந்திய அணியில் இணைந்தார் . தற்போது மிகவும் சீனியர் வீரராக 2018ன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார்.

வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் ஜோடிக்கு ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் பந்து வீச கடினமாக இருக்கும். களத்தில் நிலைத்து நின்று சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தும் அளவிற்கு பார்த்திவ் படேல்-ற்கு முழு திறமை உள்ளது. அத்துடன் தன்னை டெஸ்ட் போட்டிகளில் நிருபிக்க ஒரு சரியான பாதையாகவும் பார்த்திவ் படேல்-ற்கு அமையும்.

பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். எனவே 7வது வீரராக களமிறங்கும் ரிஷப் ஃபன்ட்-ற்கு பதிலாக இவரை களமிறக்கப்படலாம். மேலும் ஹர்திக் பாண்டியா-வை களமிறக்குவதன் மூலம் ஐந்தாவது பௌலிங் மற்றும் பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#3.ரோகித் சர்மா

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மெல்போர்ன் டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அடிலெய்டு டெஸ்டில் ஏற்பட்ட காயத்தினால் இவர் பெர்த் டெஸ்டில் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து இவர் குணமாகும் பட்சத்தில் மெல்போர்ன் டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா களமிறங்கி தனது டெஸ்ட் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

இவர் அடிலெய்டு டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் அடித்தார். நாதன் லயான் வீசிய பந்து ரோகித் சர்மா-வின் பேட்டின் கடைசியில் பட்டு கேட்ச் ஆனார். புஜாரா-வுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை முதலாவது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடினார். இவர் ஒரு அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் என்பதால் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் இவர் சிறப்பாக விளையாடுவார். ரோகித் சர்மா சரியாக செட் ஆகி விளையாட ஆரம்பித்தால் , இவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே ரோகித் சர்மா-வை இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்புள்ளது.

எழுத்து : கார்த்திக்

மொழியாக்கம் : சதீஸ்குமார்

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications