ஆஸ்திரேலியா vs இந்தியா 2018-19 : 3 வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ள இந்திய வீரர்கள்

பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல்

#2.பார்த்திவ் படேல்

பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல்

இந்திய அணியின் தற்போதைய முதுபெரும் தொடக்க ஆட்டக்காரரான பார்த்திவ் படேல் மெல்போர்ன் டெஸ்டில் மயான்க் அகர்வால்-வுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இவர். 2004ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது 19வயது இளம் வீரராக இந்திய அணியில் இணைந்தார் . தற்போது மிகவும் சீனியர் வீரராக 2018ன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார்.

வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் ஜோடிக்கு ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் பந்து வீச கடினமாக இருக்கும். களத்தில் நிலைத்து நின்று சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தும் அளவிற்கு பார்த்திவ் படேல்-ற்கு முழு திறமை உள்ளது. அத்துடன் தன்னை டெஸ்ட் போட்டிகளில் நிருபிக்க ஒரு சரியான பாதையாகவும் பார்த்திவ் படேல்-ற்கு அமையும்.

பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். எனவே 7வது வீரராக களமிறங்கும் ரிஷப் ஃபன்ட்-ற்கு பதிலாக இவரை களமிறக்கப்படலாம். மேலும் ஹர்திக் பாண்டியா-வை களமிறக்குவதன் மூலம் ஐந்தாவது பௌலிங் மற்றும் பேட்டிங் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#3.ரோகித் சர்மா

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மெல்போர்ன் டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. அடிலெய்டு டெஸ்டில் ஏற்பட்ட காயத்தினால் இவர் பெர்த் டெஸ்டில் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து இவர் குணமாகும் பட்சத்தில் மெல்போர்ன் டெஸ்ட்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா களமிறங்கி தனது டெஸ்ட் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

இவர் அடிலெய்டு டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் அடித்தார். நாதன் லயான் வீசிய பந்து ரோகித் சர்மா-வின் பேட்டின் கடைசியில் பட்டு கேட்ச் ஆனார். புஜாரா-வுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை முதலாவது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடினார். இவர் ஒரு அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் என்பதால் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் இவர் சிறப்பாக விளையாடுவார். ரோகித் சர்மா சரியாக செட் ஆகி விளையாட ஆரம்பித்தால் , இவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே ரோகித் சர்மா-வை இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்புள்ளது.

எழுத்து : கார்த்திக்

மொழியாக்கம் : சதீஸ்குமார்

Quick Links

Edited by Fambeat Tamil