கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இரு பெரும் உள்ளுர் பந்துவீச்சாளர்களான கம்லேஷ் நாகர்கோட்டி மற்றும் சிவம் மாவி இருவரும் காயம் காரணமாக 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மாற்று வீரர்களை தேடி வருகிறது.
கம்லேஷ் நாகர்கோட்டிக்கு பதிலாக கேராளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கொல்கத்தா அணியில் இனைந்துள்ளார். உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவம் மாவிக்கு இதுவரை எந்த மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.
கம்லேஷ் நாகர்கோட்டி கடந்த ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இந்த தொடரிலும் விலகியுள்ளதால் தொடர்ந்து இரு ஐபிஎல் தொடரிலும் களமிறங்கும் வாய்ப்பை இழந்துள்ளார். சிவம் மாவி கடந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தினார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் இடம்பெற்றிருந்தால் கண்டிப்பாக அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி சார்பில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருப்பார். பொதுவாக ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஒவ்வொரு அணியும் வழக்கும்.
இந்த இருபெரும் உள்ளூர் வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதால் கொல்கத்தா அணியின் வேகப்பந்து கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. பிரஷித் கிருஷ்ணா மட்டுமே உள்ளுர் கிரிக்கெட் வீரராக அந்த அணியின் ஆடும் XI-ல் இடம்பெறுவார்.
நாம் இங்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிவம் மாவிக்கு பதிலாக களமிறங்கவுள்ள 3 இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம்.
#3 வி கௌசிக்
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் கர்நாடக அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்து பந்துவீச்சில் அசத்தியுள்ளார் வி கௌசிக். கர்நாடக அணியின் டாப் 3 பந்துவீச்சாளர்களான வினய் குமார், பிரஷித் கிருஷ்ணா, அபிமன்யு மிதுன் ஆகியோர் வரிசையில் நான்காவது வீரராக அந்த அணியில் வி கௌசிக் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்று 18 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் சிவம் மாவிக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
கௌசிக் இரு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த எஸ்.எம்.ஏ கோப்பையில் இவரது சிறப்பான வேகப்பந்து வீச்சை காண முடிந்தது. 26 வயதான இவர் கர்நாடக பிரிமியர் லீக்கில் அதிரடி பந்துவீச்சை வெளிப்படுத்தி தன்னை ஒரு முழு டி20 வீரராக அறிவித்துள்ளார்.
சிறந்த திறமை வாய்ந்த வி கௌசிக் காயம் காரணமாக விலகியுள்ள சிவம் மாவிக்கு தகுந்த மாற்று வீரராக, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இருப்பார். கொல்கத்தா அணி தனது 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 24 அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவிருக்கிரது.