#2 துஸர் தேஸ்பாண்டே
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்காக 10 போட்டிகளில் பங்கேற்ற துஸர் தேஸ்பாண்டே 14.05 சராசரியுடன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் மும்பை அணிக்காக சற்று நீண்ட காலமாக விளையாடி வருகிறார். தற்போது அவரது முழு ஆட்டத்திறன் வெளிபட்டுள்ளது. இதுவே அவரை தனது கிரிக்கெட் வாழ்வில் அடுத்த படிக்கு கொண்டு செல்ல காரணமாக இருக்கும்.
இவர் கிளப் அணியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான முன்மாதிரி போட்டியில் விளையாடி வந்ததால் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறமுடியாமல் போனது. இவர் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்காக முதலில் விளையாட தேர்வு செய்யப்பட்ட போது போட்டி தொடங்கும் ஒரு நாளுக்கு முன் இவரது தயார் இறந்துவிட்டார். இருப்பினும் மும்பை அணிக்காக விளையாடி போட்டி முடிந்த பின்பு தான் தன் இல்லத்திற்கு சென்று தன் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதன்மூலம் இவரது கிரிக்கெட் மீது எவ்வளவு பற்று வைத்துள்ளார் என தெரிகிறது.
கிரிக்கெட் விளையாட்டிற்கு இந்த பற்று மிகவும் அவசியமான ஒன்றாகும். 2019 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகியுள்ள சிவம் மாவிக்கு தகுந்த மாற்று வீரராக துஸர் தேஸ்பாண்டே திகழ்வார். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் சக அணி பந்துவீச்சாளர்களின் அனுபவத்தை பெற்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.