#1 வினய் குமார்
வினய் குமார் கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக விளையாடினார். இவரது மோசமான ஆட்டத்திறனால் அதன்பின் எந்தப் போட்டியிலும் இந்த அனுபவ வீரர் இடம்பெறவில்லை. இதனால் 2019 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்டார். அதன்பின் யாரும் இவரை ஏலத்தில் வாங்கவில்லை.
இருப்பினும் தனது நம்பிக்கையை விடாமல் 2018-19ல் நடந்த மூன்று வகையான உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தி உள்ளார். இவரது விக்கெட் வீழ்த்தும் திறமை இன்றளவும் குறையாமல் சிறப்பாகவே உள்ளது. அத்துடன் இந்த சீசனில் வினய் குமாரின் பேட்டிங் பெரிதும் கர்நாடக அணிக்கு உதவியுள்ளது.
கொல்கத்தா அணியில் அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என யாரும் இல்லை. வினய் குமார் மற்ற இளம் பந்துவீச்சாளர்களை நிர்வகிக்க ஒரு சரியான வீரர் ஆவார். கடந்த தொடரை போல் இல்லாமல் சில வாய்ப்புகள் வினய் குமாருக்கு அளித்தால், தற்போது உள்ள ஆட்டத்திறனிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
குல்தீப் யாதவ், சுனில் நரைன் போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் கொல்கத்தா அணியில் இருக்கின்றனர். இருப்பினும் வினய் குமாரின் அனுபவம் இவர்களை விட அதிகம். எனவே சிவம் மாவிக்கு மாற்று வீரராக வினய் குமாரை கொல்கத்தா அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.