பணிரண்டாவது உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மண்ணில் வரும் 30 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது/ உலக கோப்பையை வெல்லும் அணிகளாக இங்கிலாந்து. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கணிக்கப்பட்டுள்ள. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் உலக கோப்பையை வெல்வதற்கான மிகப்பெரிய அளவில் சவால் அளிக்கும் அணிகளாகவும் உள்ளன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் எந்நேரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, உலக கோப்பை தொடரில் தனது வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இடம் பெற காத்திருக்கும் மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.நாதன் லயன்:
ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஆவார். ஆனால், 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. 25 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவரும் அங்கம் வகித்தார், நாதன் லயன். இந்த வருடத்தில் மட்டும் 10 போட்டியில் விளையாடி 8 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். எனவே, உலக கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள லயன் தமது வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இடம் பிடிக்க முயற்சிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#2.ஹசிம் அம்லா:
தென்னாபிரிக்காவின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான ஹசிம் அம்லா கடந்த பத்தாண்டுகளாக தென்னாபிரிக்கா பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாய் இருந்து வருகிறார். கடந்த ஆண்டில் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 315 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும், 71 ரன்கள் குவித்ததே ஒரு போட்டியில் இவர் குவித்த அதிகபட்ச ரன்களாகும். இருப்பினும், இவருக்கு தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளமையால், தான் இழந்த பேட்டிங் தாக்கத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்து அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே, இளம் வீரர்களின் வருகை சற்று அதிகரித்துள்ளதால் தொடர்ந்து ஹாஷிம் அம்லா ரன்களை குவிக்காமல் இருந்தால் உலக கோப்பை தொடருக்கு பின்னர், இவர் அணியில் இருந்து கழற்றி விடப்படும் அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு உலக கோப்பை தொடரில் ஜொலித்தால் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் ஹாஷிம் அம்லா அணியில் அங்கம் வகிப்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.
#1.தினேஷ் கார்த்திக்:
டி20 போட்டிகளில் ஆட்டத்தை சிறந்து முடிக்கும் வீரர் என்ற பெருமையை கொண்டுள்ள தினேஷ் கார்த்திக், ஒரு நாள் போட்டிகளில் தனது இடத்தை பலகாலமாக இழந்து தவித்தார். இதன் பின்னர், தற்போது உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இவர் அணியில் உள்ளார். ஏற்கனவே, அணியில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர் இந்திய அணியில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக்கின் இடம் இறுதியானது. இங்கிலாந்து மண்ணில் இவரது ஒருநாள் போட்டி சாதனைகள் சிறப்பாக அமையவில்லை. இருந்தாலும் இதனையெல்லாம் தவிடுபொடியாக்கி உலக கோப்பை தொடருக்கு பின்னரும் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க இம்முறை சற்று கூடுதலான பலத்துடன் இவர் களம் காண்பது அவசியம்.