ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பையை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய போட்டியாக ரசிகர்கள் கருதுகின்றனர். போட்டியின் போது உற்சாக நிலைக்கு எந்த தடையும் இல்லை, ஏனெனில் இது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுகிறது. வீரர்கள் பெறும் ஆதரவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது, இது போட்டியை இன்னும் சிலிர்ப்பூட்டுவதாகவும், பார்க்கத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. இந்த மாபெரும் திருவிழாவின் 12 வது பதிப்பு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்து வருகிறது, இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 10 அணிகள் மோதுகிறது.
உலகக் கோப்பை வரலாற்றில் பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலியா அணி 5 முறையும் இந்திய அணி 2 முறையும் வென்றுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பை வெற்றியை ஒருபோதும் ருசிக்காத வீரர்கள் உள்ளனர், அதே நேரத்தில் ஒரு சில வீரர்கள் கோப்பையை மூன்று முறை வென்றுள்ளனர். இந்த கட்டுரை உலகக் கோப்பையில் மூன்று முறை வெற்றி பெற்ற 3 கிரிக்கெட் வீரர்களை பற்றி எடுத்துரைக்கிறது.
#1. க்ளென் மெக்ராத் - ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும்போது க்ளென் மெக்ராத் நடுத்தர வேக பந்துவீச்சில் இவர் முக்கியமான வீரராக கருதப்பட்டார். இவரின் நடுத்தர வேக பந்துவீச்சில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். சராசரி வேகத்தில் பந்துவீச்சு இருந்தபோதிலும், அவர் தனது துல்லியமான கோடு மற்றும் நீளம் மாறமால் வீசுவார், இது நடுத்தர வேக பந்துவீச்சில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளரான க்ளென் மெக்ராத் 1999, 2003 மற்றும் 2007 உலகக் கோப்பை பதிப்புகளில் மறக்க முடியாத பகுதிகளில் இவரும் இடம் பெற்றிருக்கிறார். க்ளென் மெக்ராத் இந்த 3 பதிப்புகளிலும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு வரிசையில் பங்கு வகித்தார் மற்றும் கோப்பைகளை வெல்வதற்கு தனது அணிக்கு உதவினார்.
#2. ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலியா அணி
ஆடம் கில்கிற்ஸ்ட், இவர் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனாக திகழ்ந்து வந்தார். 1999 ஆம் ஆண்டில் தனது முதல் உலகக் கோப்பையை விளையாடும்போது, ஆடம் கில்கிறிஸ்ட் இரு துறைகளிலும் சிறப்பாக விளையாடினார். இந்த உலகக்கோப்பை வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பரவலாகக் கருதப்படும் ஆடம் கில்கிற்ஸ்ட், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் குமார் சங்கக்காராவுக்குப் பிறகு அதிகபட்சமாக ஆட்டமிழக்கச் செய்த சாதனையை அவர் படைத்துள்ளார். ஆடம் கில்கிறிஸ்ட் 1999, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையையும் வென்றுள்ளார்.
#3. ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா அணி கேப்டன்
தனது தேசத்தின் மஞ்சள் ஜெர்சியை அணிந்த ரிக்கி பாண்டிங், ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவர் ஆஸ்திரேலியாவின் 3 உலகக் கோப்பை வென்ற அணிகளில் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தார். 1995 ஆம் ஆண்டில் தனது முதல் போட்டியில் விளையாடிய பிறகு, ரிக்கி பாண்டிங் 1999, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் தனது நாட்டிற்காக 3 உலகக் கோப்பையை வென்றார்.
1999 இல் ஸ்டீவ் வாக் தலைமையில் கோப்பையை வென்ற பிறகு, ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆனார். இதன் பிறகு நடைப்பெற்ற 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இரண்டு உலகக் கோப்பை தொடரிலும் இவரின் கேப்டன்சிப்பில் ஆஸ்திரேலியா அணி வெற்றியை பெற்றது. இவர் 2003 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 140 ரன்கள் குவித்திருந்தார். இவர் சிறந்த கேப்டன் என்று சாதனையை பதிவு செய்திருந்தார். ஆஸ்திரேலியா அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு தனிநபர் கிரிக்கெட் வீரராக ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெற்றார், ஏனெனில் அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 13,000 ரன்களை அடித்துள்ளார்.