#1 அம்பாத்தி ராயுடு
2019 உலக கோப்பை அணியில் இந்திய அணியின் நம்பர்-4 வரிசையில் களமிறங்க அதிக வாய்ப்புள்ள வீரராக பார்க்கப்பட்ட அம்பாத்தி ராயுடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் மிடில் ஆர்டரில் ஓரளவிற்கு ரன் குவிப்பில் ஈடுபட்டார் ராயுடு. அப்பொழுது பார்க்கும்போது இவர்தான் உலகக் கோப்பையில் இவர் சிறந்த பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு இருப்பார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்திறன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் ராயுடுவிடன் அந்த திறன் சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இல்லாத காரணத்தால் கடைசி 2 போட்டிகளிருந்து நீக்கப்பட்டார்.
நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை குவித்த ராயுடு அடுத்து நடந்த ஆஸ்திரேலிய தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய தேர்வுக்குழுவிற்கு மேலும் தலைவலியை அதிகபடுத்தியது. அத்துடன் ஐபிஎல் தொடரிலாவது சிறப்பான ஆட்டம் வெளிபடுத்துவார என பார்க்கப்பட்டபோதும் அவரிடமிருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இதனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிடில் ஆர்டரில் இறக்கியது.
இதனால் ராயுடு தற்போது ஆட்டத்திறன் இல்லாமல் இருக்கிறார் என தேர்வுக்குழு கணித்துவிட்ட காரணத்தால் இவரை இந்திய உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் விஜய் சங்கர் நம்பர்-4ல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய காரணத்தால் ராயுடுவிற்கு பதிலாக தமிழ்நாடு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் 2019 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார.