நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக வென்றது. இந்த மிகப்பெரிய தொடர் முடிந்த பின்பு, உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற வீரர்கள் உலக கோப்பை தொடரிலும் அவர்களது சொந்த அணிகளுக்காக இடம்பெற்றுள்ளனர். டி20 போட்டிகளில் ஒரு வீரரின் செயல்பாடு உலக கோப்பை தொடர் போன்ற மிகப்பெரிய தொடரில் விளையாட போதிய நம்பிக்கையை அளிக்கும். எனவே, இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்படாமல் இருந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற மூன்று இந்தியர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.புவனேஸ்வர் குமார்:
கடந்த சில மாதங்களாக தனது பந்துவீச்சில் தடுமாறி வருகிறார், புவனேஸ்வர் குமார். இதற்கெல்லாம் காரணம், அடிக்கடி இவருக்கு ஏற்பட்ட காயங்கள் தான். நடந்து முடிந்த 2019 ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இதற்கு முன்னர், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாய் அமைந்தார், புவனேஸ்வர்குமார். மேலும், இவர் அந்த அணியின் துருப்புச் சீட்டாக விளங்கினார். ஆனால், தற்போதைய சீசனில் இவர் சிறப்பாக விளையாடததால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் இவர், இங்கிலாந்து சீதோசன நிலைகளுக்கு ஏற்ப பந்து வீசும் திறன் பெற்றவர். இழந்த ஆட்டத்திறனை மீண்டும் பெற்று இந்திய அணி மற்றொரு முறை உலகக் கோப்பை தொடரை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கலாம்.
#2.விஜய் சங்கர்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கரை உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இணைத்துள்ளது, தேர்வுக்குழு. மேலும், நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் காயமடைந்த ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக, இவர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றார். 2019 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் இடம் பெற்று இருந்தார். அணியில் பல சாதனை புரிந்த தொடக்க இணையான டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் உலகக்கோப்பை முன்னேற்பாடுகளால் ஐதராபாத் அணியில் இருந்து விலகினார்கள். இதனால், அனைவரது பார்வையும் விஜய் சங்கரின் மேல் விழுந்தது. இவர் தொடரின் 15 போட்டிகளில் விளையாடி 200 ரன்களை மட்டுமே தாண்டியுள்ளார். நான்காம் இடத்தில் விளையாட சரியான ஆள் என்று இந்திய அணி இவரை நம்பியுள்ளது. ஆனால், இவரின் ஃபார்ம் தற்போது கேள்வி குறியாக்கியுள்ளதால் உலக கோப்பை தொடரில் ஜொலிப்பார் என்பதில் சந்தேகம் உள்ளது.
#3.குல்தீப் யாதவ்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் போதிய ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். கடந்த சீசனில் ஒரே போட்டியில் குறைந்தபட்சம் 2 விக்கெட்களை கைப்பற்றி கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் நம்பிக்கையைப் பெற்று வந்தார். ஆனால், இம்முறை 9 போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார். இதனால், அணி நிர்வாகம் இவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கியது. அணிக்கு வெற்றியை தேடித்தரும் வீரரான இவர், தற்போது சற்று திணறி வருகிறார். எனவே, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிடில் ஓவர்களில் பந்துவீசி சில விக்கெட்களை வீழ்த்தி இவரையே பெரிதும் நம்பியுள்ளது.