ஒவ்வொரு தலைமுறையிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமாகி கொண்டிருப்பார்கள். அதுபோல நடப்பு தலைமுறையில் ஸ்டீவன் ஸ்மித், பாபர் அஸாம், ஜோ ரூட், கனே வில்லியம்சன் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் மேற்குறிப்பிட்ட வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடம் வகிப்பவர், விராட் கோலி. ஆனால் விராட் கோலி தனக்கு நிகர் தானே என்று பல முறை நிரூபித்துள்ளார். அனைத்து 3 தரப்பிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி எதிரணியின் பந்துவீச்சை திறம்பட கையாண்டு அவற்றையெல்லாம் பாடங்களாக மாற்றி சாதனைக்கு மேல் சாதனை புரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த சராசரி, அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீரர், 8000, 9000 மற்றும் 10000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர், டி20 போட்டிகளில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர் என இவரது சாதனைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 30 வயதான விராட் கோலி, 2019 உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசியிருப்பினும் ஒரு சதம் கூட விளாசாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ஆனால், அந்த ஏமாற்றத்தில் இருந்து மீட்டெடுக்கும் விதமாக நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களை இது குதூகாலப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் தனது மாஸ்டர் கிளாஸ் ஷாட்கள் மூலம் கவர்ந்துள்ளார், விராட் கோலி. எனவே, இவரை உலகின் தலை சிறந்த வீரராக உருவாக்குவதற்கு காரணமாய் அமைந்த 3 திறன்களை இந்தப் பட்டியல் விவரிக்கின்றது.
#1.மிகச்சிறந்த இலக்குகளை தேர்வுசெய்ய்யும் விராட் கோலி:
சர்வதேச போட்டியில் விராட் கோலிக்கு நிகராக வேறு எந்த வீரரும் விளையாடவில்லை. கனே வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவன் ஸ்மித் போன்ற தரமான வீரர்கள் இருப்பினும் அவர்கள் அனைவரையும் அனைத்து 3 வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளிப்பதில்லை. எனவே, உலகின் தலை சிறந்த வீரனாக தம்மை மாற்ற மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைந்து வருகிறார், விராட் கோலி. எந்த ஒரு பணியையும் அவர் சுலபமாக செய்து முடித்துவிட இல்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே டிரைவ் வித ஷாட்களை மேற்கொள்ளும் விராட் கோலி, பலமுறை அத்தகைய ஷாட்களை மேற்கொண்டதால் ஸ்டம்ப்களை பறிகொடுத்து ஆட்டம் இழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சோதனைகளை எல்லாம் மீட்டெடுத்து இதில் இருந்து கற்ற பாடத்தை தற்போது சாதனையாக மாற்றி வருகிறார், விராட் கோலி. கிரிக்கெட் போட்டிகள் நாளுக்குநாள் தன்னை மெருகேற்றி வருவது போல விராத் கோலியும் எதிரணியின் பந்துவீச்சை எதிர் கொண்டு தனது ஆதிக்கத்தினை மேலோங்கி செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக சதங்களை காணும் கோலி தமது ஆட்ட திறனில் சிறிதும் தொய்வின்றி செயல்பட்டு வருகிறார். உண்மையில், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து காணப்படுகிறார். இதன் காரணமாகவே, தற்போதைய கிரிக்கெட் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். அனைத்திற்கும் உச்சம் சென்ற பின்னரும் திருப்தி அடையாமல் மேலும் மேலும் பல சாதனைகளை புரியும் நோக்கத்தில் விராத் கோலி தம்மை ஈடுபடுத்தி வருகிறார்.