#3. மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறந்த செயலாக்கம்:
தகுந்த செயலாக்கமே விராட் கோலியின் வெற்றிக்கு முதல் மற்றும் முக்கிய காரணமாக அமைகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது டி20 போட்டிகளிலும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 77 ஆட்டங்களில் பங்கேற்று 53.76 என்ற பேட்டிங் சராசரி உடன் 25 சதங்களை விளாசியுள்ளார், விராத் கோலி. ஆட்டத்தின் தொடக்கம் இன்னிங்ஸ் முதல் நான்காம் இன்னிங்ஸ் வரையிலுமே சுலபமாக பேட்டிங்கை கையாண்டு பல்வேறு முறை இந்திய அணிக்காக வெற்றிகளையும் தேடித் தந்துள்ளார். அடுத்ததாக, ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் விளங்கும் விராட் கோலி, 59.40 என்ற பேட்டிங் சராசரியிம் மூலம் மலைக்க வைக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் சரி ஒரு நாள் போட்டிகளிலும் சரி இவர் வைத்துள்ள பேட்டிங் சராசரி 50க்கும் மேல் தான். ஆனால், டி20 போட்டிகளில் 50 என்ற சராசரியை தொட நூலிழை வித்தியாசம் மட்டுமே விராத் கோலியிடம் காணப்படுகிறது. ஆனாலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார், விராட் கோலி. இதன் காரணமாகவே அனைத்து மூன்று தரப்பிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முன்னிலை வகிக்கும் விராட் கோலி, இத்தலைமுறையின் ஆகச்சிறந்த பேட்ஸ்மேனாகவே திகழ்ந்து வருகிறார்.