2019 உலகக் கோப்பை தொடர்: 3 காரணங்களுக்காக இந்திய அணியில் தோனி முக்கிய பங்கு வகிப்பார்

தோனி இந்திய அணியின் சொத்து
தோனி இந்திய அணியின் சொத்து

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதன் மூலம் 4 வது உலகக்கோப்பை தொடரில் தோனி விளையாடவுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளார். கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையிலும் கோலிக்கு எல்லா வகையிலும் உதவியைச் செய்து வருகிறார் தோனி. சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து காலத்திலும் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் தோனி இருப்பார்.

37 வயதான மகேந்திர சிங் தோனி பதட்டமான சூழ்நிலைகளில் அமைதியாக அணியை வழிநடத்துவதில் கேப்டன் விராத் கோலிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார்.

தோனி தலைமையில் இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றது. 2015-ஆம் ஆண்டு அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது.

இந்தியாவின் மிக முக்கியமான சொத்தாக கருதப்படும் தோனி வரும் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்த 3 காரணங்களுக்காக இந்திய அணிக்கு பெரும் பங்களிப்பார்.

# 3. அனுபவம்

தற்போது இந்திய அணியில் விளையாடும் அனுபவமிக்க வீரர் தோனி. இதுவரை 341 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி 50.72 சராசரி, 10,500 ரன்கள் எடுத்துள்ளார்.

கோலிக்கு தனது அனுபவத்தின் மூலம் தோனி உதவியாக இருப்பார்.
கோலிக்கு தனது அனுபவத்தின் மூலம் தோனி உதவியாக இருப்பார்.

முக்கிய பந்துவீச்சாளர்களை மாற்றம் செய்ய கோலிக்கு பெருமளவில் உதவி செய்வார் தோனி. மேலும் இக்கட்டான சூழ்நிலையில் கோலிக்கு தனது அனுபவத்தை கொண்டு உதவ முடியும்.

# 2. விக்கெட் கீப்பிங் திறன்

ஒரு வினாடி பேட்ஸ்மேன் தனது காலை க்ரிஸ்க்கு வெளியே எடுத்தாலும் தோனி பின்னால் இருக்கும் போது அது அவுட் என்பது உறுதி என்ற அளவில் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்தி வருகிறார் தோனி. உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தோனி என்பதில் இன்றும் எந்த சந்தேகமும் இல்லை.

உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்.
உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்.

இதுவரை 434 டிஸ்மிஸ் செய்து ஆடம் கில்கிறிஸ்ட், சங்ககார ஆகியோருக்கு அடுத்து சிறந்த விக்கெட் கீப்பர் வரிசையில் உள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 100 ஸ்டம்பிங்க்கு மேல் செய்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

# 1. பினிஷிங் திறன்

ஒருநாள் போட்டிகளில் மிக சிறந்த பினிஷராக தோனி இருந்து வருகிறார். ஐபிஎல், டி20 என அனைத்து வித போட்டிகளிலும் இந்திய அணிக்கு பினிஷிங் ரோலில் தோனி சிறப்பாக பங்களித்து வருகிறார். தோனியின் அணுகுமுறை, அமைதியான தன்மை, போன்ற திறனைக் கொண்டு இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை தந்துள்ளார்.

டாப் கிளாஸ் பினிஷர்.
டாப் கிளாஸ் பினிஷர்.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு பெரும்பாலான போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தரும் வகையில் பினிஷிங் ரோலில் அருமையாக விளையாடி வருகிறார். இந்த அனுபவம் வரும் உலகக்கோப்பை தொடரிலும் சிறந்த வகையில் தோனிக்கு உதவியாக இருக்கும்.

தோனி எந்தவொரு சூழ்நிலையிலும் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி பெற்று தர வேண்டும் என்ற நிலையில் இருந்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

எழுத்து- சாய் சித்தார்த்

மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்

Quick Links