2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி குரூப் சுற்றோடு வெளியேறியது. உலக கோப்பை தொடரில் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாடு ஆகும். இதன் காரணமாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதன் முதலே குறுகிய கால போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக உருப்பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரு ஒரு நாள் தொடர்களிலும் நியூசிலாந்து, இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களின் கைப்பற்றி தொடர்ச்சியாக சாதனை படைத்துள்ளது. தங்களது முதலாவது உலக கோப்பை தொடரை வெல்லும் முனைப்பில் நடப்பு தொடரில் களமிறங்க உள்ளது, இங்கிலாந்து அணி. இதுவரை மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் ஒருமுறை கூட இந்த அணி கோப்பையை கைப்பற்றியது இல்லை. எனவே, 2019 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கான மூன்று காரணங்களை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.மிகச்சிறந்த பேட்டிங் லைன்-அப்:
இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் விடுவிக்கப்பட்ட போதிலும் அணியின் பேட்டிங் தூண்களாக கேப்டன் இயான் மார்கன், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் மற்றும் ஜாசன் ராய் போன்றோர் உள்ளனர். இது மட்டுமின்றி, ஆல்ரவுண்டர்கள் ஆக மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கூடுதல் பலம் சேர்க்க உள்ளனர். இங்கிலாந்து அணியை போட இந்திய அணியிலும் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கோஹ்லி, தோனி போன்றோரும் ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் தென் ஆப்பிரிக்க அணியில் டுபிளிசிஸ், குயின்டன் டி காக், ஹாஷிம் அம்லா, டேவிட் மில்லர் மற்றும் மார்க்கிராம் ஆகியோரும் தங்களது அணிகளுக்கு பேட்டிங் தூண்களாக செயல்பட உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ராயல் லண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ச்சியாக 350க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம், இங்கிலாந்து மைதானங்களில் ரன்களை சுலபமாக குவித்து மிகப் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால், இங்கிலாந்து அணி மற்ற அணிகளை விட சற்று கூடுதலாக ரன்களை குவிக்க வாய்ப்புகள் உள்ளது.
#2.பழக்கப்பட்ட சீதோஷ்ன நிலை:
12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற இருப்பதால் அந்நாட்டு அணியினருக்கு சற்று பழக்கப்பட்டவையாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் தங்களது சொந்த மண்ணில் விளையாடி உள்ளது. இங்கிலாந்து அணி அவற்றில் 24 போட்டிகளில் வெற்றி பெற்றும் நான்கில் தோல்வியுற்று ஒரு போட்டி டையில் முடிந்தும் மூன்று போட்டிகள் முடிவு இல்லாமலும் இருந்துள்ளன. 2015ஆம் ஆண்டு தங்களது சொந்த மண்ணில் உலக கோப்பை தொடர் நடைபெற்றதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டி வரை இவ்விரு அணிகளும் முன்னேறின. அதேபோல், 2019 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இம்மைதானத்தில் கடந்த மூன்று வருடங்களில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது, இங்கிலாந்து அணி. இது கூடுதல் பக்கபலமாக இவர்களுக்கு உள்ளது.
#3.சொந்த நாட்டு ரசிகர்களின் உறுதுணை:
உலக கோப்பை தொடரில் மேலும் ஒரு நன்மையாக சொந்த மண்ணில் ரசிகர்கள் நேர்மறையான நிலைப்பாட்டை இங்கிலாந்து அணிக்கு ஏற்படுத்த உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் மற்ற நாட்டு ரசிகர்களை காட்டிலும் இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் கூடுதலான கரகோஷத்தை வெளிப்படுத்துவர். இதன் காரணமாக, தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி நன்றாக செயல்படும். சொந்த நாட்டு ரசிகர் முன்பு விளையாடுவதால் எதிரணியினருக்கு எதிராக விளையாடும் போட்டிகளில் நன்றாக விளையாட சற்று நம்பிக்கை அளிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் தங்களின் ரசிகர்களின் ஆதரவுடன் சிறப்பாக தொடரை வெல்ல முனைவர்.