#2 இந்திய தொடக்க வீரர்களின் தொடர் சொதப்பல்
இந்திய அணியின் மிகுந்த பலமே தொடக்க ஆட்டக்காரர்கள் தான். இந்திய அணியின் கடந்த கால வெற்றிகளை பார்க்கும் போது இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும். முக்கியமாக சேஸிங் செய்யும்போது டாப்-3 பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் தற்போது ஷிகார் தவான் அல்லது ரோகித் சர்மா இரண்டில் ஏதேனும் ஒருவர் தான் விராட் கோலி-யுடன் சேர்ந்து சிறிது நேரம் விளையாடுகின்றனர்.
கடந்த சில போட்டிகளில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களுமே மோசமான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வருகின்றனர். ரோகித் சர்மா தற்போது வரை ஒரு குறைவான ரன்களையாவது அடிக்கிறார், ஆனால் தவான் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறுகிறார்.
ராஞ்சியில் நடந்த போட்டியிலும், தவானின் சொதப்பல் தொடர்ந்தது. முதல் சில பந்துகளில் பவுண்டரிகள் ஏதும் விளாசாமல் தடுத்து விளையாடினார் தவான். தனது வழக்கமான ஆட்டத்திறனை இழந்துள்ள டெல்லி தொடக்க ஆட்டக்காரர் தவான் தவறான ஷாட் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் ரோகித் சர்மா சிறந்த தொடக்கத்தை அளித்து பவுண்டரிகளை விளாசி வந்தார். ஆனால் முதல் 4 ஓவர்களிலே பேட் கமின்ஸின் இன்-ஸ்விங்கை கணிக்க தவறி தனது விக்கெட்டை இழந்தார் ரோகித் சர்மா.