#1 இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர்
ஒரு கிரிக்கெட் அணி தனது தொடக்க வீரர்களை முன்னதாக இழந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். விராட் கோலி-யை தவிர வேறு யாரும் இந்த பங்களிப்பை இந்திய அணிக்கு அளிக்கவில்லை. இந்திய கேப்டன் விராட் கோலியை தவிர வேறு யாருமே 50 ரன்களை கூட தாண்டவில்லை. அம்பாத்தி ராயுடு களத்தில் தொடர்ந்து தனது தடுமாற்றத்தை வெளிபடுத்தி வந்தார். மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த ராயுடுவை பேட் கமின்ஸ் தனது வேகத்தில் வேகத்தில் முதல் 8 ஓவர்களிலேயே வீழ்த்தினார்.
எம்.எஸ்.தோனி தனது சொந்த மண்ணில் சிறப்பான தொடக்கத்தை அளித்து சில பெரிய ஷாட்களை விளாசி வந்தார். நேராக ஷாட் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோனி தனது விக்கெட்டை இழந்தார். கேதார் ஜாதவும் இதேப்போல் சற்று நிதானமாக விளையாடி வந்தார். நிதானமாக விளையாடி வந்த கேதார் ஜாதவ் மோசமான ஷாட் தேர்வால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
விஜய் சங்கர் விராட் கோலியுடன் இனைந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை உயர்த்தினார். கோலி அதிக ரன்களை அடிக்கும் நோக்கில் விளையாடி வந்தார். மிகுந்த நெருக்கடியில் விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலி, எதிர்பாரா சமயத்தில் தனது விக்கெட்டை இழந்தார்.