இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டி நேற்று நியூசிலாந்தின் அவுன்ன்ட் மாங்குய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஒரு அணியாக இந்திய அணி ஆடி வெற்றி பெற்றாலும் சில திருப்புமுனைகள் சரியாக இந்திய அணிக்கு சாதகமாக அமைந்ததுதான் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம்.
1. ஷிகர் தவான் ரோகித் சர்மாவின் அபாரமான துவக்க பார்ட்னர்ஷிப்
இந்திய அணிக்காக காலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாள் தொடர்களில் அபாரமான துவக்கம் கொடுத்து வருபவர்கள் ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும். அவர்கள் இன்று இரண்டாவது போட்டியிலும் அதனை மீண்டும் நிரூபித்துள்ளனர் . வழக்கம் போல ஷிகர் தவான் ஓர் புறம் அதிரடியாக அடித்து ஆட ரோகித் சர்மா பொறுமையாக நின்று ஆடினார்.
இப்படியாக நகர்த்திக் கொண்டே சென்று முதல் விக்கெட்டிற்கு மட்டும் 154 ரன்கள் சேர்த்தனர். இது அவர்களுடைய 14வது 100 ரன் பார்ட்னர்ஷிப் ஆகும். இறுதியில் ஷிகர் தவான் 66 ரன்களிலும் ரோஹித் சர்மா 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் இந்த துவக்க பார்ட்னர்ஷிப் 154 என்பது இந்தியாவின் வெற்றிக்கான நங்கூரத்தை பாய்ச்சியது.
2.இறுதி ஓவர்களில் ஃபினிஷிங் டச் கொடுத்தார் தோனி மற்றும் கேதர் ஜாதவ்
துவக்க வீரர்கள் அபாரமான துவக்கம் கொடுத்தாலும் அதற்கு அடுத்து வந்த வீரர்கள் இந்தியாவின் ரன் ரேட்டை தொடக்க வீரர்களைப் போல் கொண்டு செல்ல முடியவில்லை. இடைப்பட்ட ஓவர்களில் இந்தியாவின் பேட்டிங் மந்தமானது. 40 முதல் 45 வயது வரை இந்தியா வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் கடைசி 5 ஓவர்களில் வந்து எதிரணி பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தனர். மகேந்திர சிங் தோனி 33 பந்துகளில் 48 ரன்களும் கேதர் ஜாதவ்1 0 பந்துகளில் 22 ரன்களும் விளாசினார். குறிப்பாக 49 ஓவரில் 14 ரன்களும் 50 ஓவரில் 21 ரன்கள் விளாசி பினிஷிங் டச் கொடுத்தனர்.
3. மீண்டும் கைகொடுத்த இந்தியாவின் சுழல் சிங்கங்கள்
கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் குல்தீப் யாதவ் மற்றும் யுஜவேந்திர சகால் ஆகிய இருவரும் அற்புதமாக தங்களது வேலைகளை கச்சிதமாக செய்து வருகின்றனர்
ஒரு கட்டத்தில் நியூசிலாந்து வீரர்கள் ஓரளவிற்கு நன்றாக ஆடி சரியான முறையில் சென்றுகொண்டிருந்தனர். பின்னர் வழக்கம் போல் இந்தியாவின் சுழல் இணைகள் ஆட்டத்திற்குள் வந்தனர்.
சரியான நேரத்தில் காலின் முன்ரோவை 31 ரன்களில் வெளியேற்றினார் யுஜவேந்திர சகால். பின்னர் குல்தீப் யாதவ் தனது சுழல் வலையில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பின்னி எடுத்துவிட்டார் . 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இடையில் கேதர் ஜாதவ் தனது வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சினை வைத்து ஒரு விக்கெட் வீழ்த்தினர்.