ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை குவித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்தை எதிர்கொள்வது இந்திய அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் ஓடிஐ, டி20யில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக நியூசிலாந்து தற்போது உள்ளது.
சமீப காலமாக தனது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி தனது பெரும்பான்மையை நிருபித்து வருகிறது. நியூசிலாந்தில் உள்ள ஆடுகளம் முழுவதும் தட்டையாக காணப்படும். இதற்கு சான்றாக சமீபத்தில் குவித்த அதிக ரன்களை நாம் கூறலாம்.
இந்த தொடர் இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாகவும், அத்துடன் தட்டையான மைதானங்களில் இந்திய அணியின் தனது ஆட்டத்தை கையாளும் திறமையை நாம் காணலாம். நாம் தற்போது பார்க்கும் பொழுது இரு அணிகளுமே மிகவும் வலிமை வாய்ந்த அணிகளாகத்தான் உள்ளது. இந்த தொடரில் முழுமையாக யார் சிறப்பானவர்கள் என்பதை கண்டறிய உதவும்.
நியூசிலாந்து அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த தொடக்கத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் இங்கு ஏன் இந்திய-நியுசிலாந்து தொடரில் நியுசிலாந்து அணிக்கு சாதகமாக தொடர் அமையும் என்பதற்கான மூன்று காரணங்களை காண்போம்.
#3. இந்திய அணி இன்னும் சரியாக ஓடிஐ அணியை தயார் செய்யவில்லை.
ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததால் இந்திய அணி இன்னும் சரியாக அணி ரெடியாகவில்லை. பாண்டியா இல்லாததால் அவருக்கு பதிலாக ஜடேஜா-வை இந்திய அணியில் வைத்து முயற்சி செய்து வருகின்றனர். அத்துடன் ஒரு சுழற்பந்து (ரிஸ்ட் ஸ்பின்னர்) வீச்சாளரும் இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளனர்.
இந்திய கேப்டன் விராட் கோலி இரு சுழற்பந்து வீச்சாளர்(ரிஸ்ட் ஸ்பின்னர்)-களை இந்திய அணியில் விளையாட வைத்து மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என விரும்புகிறார். ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றால் இந்திய அணியில் இரு ரிஸ்ட் ஸ்பின்னர்களை விளையாட வைக்கலாம். ஆனால் நம்பர்-7 பேட்டிங் மங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் குமார் 7 வது வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்குவார். விஜய் சங்கர் ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒரு போட்டியில் விளையாடியதை வைத்து அவரை ஆல்-ரவுண்டர் ஸ்லாட்டில் களமிறங்குவது சற்று விபரீதமான செயலாகும். இந்திய அணி 6வது பௌலிங் மற்றும் 7வது பேட்டிங்கை கண்டறிந்து விட்டால் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இதனை தொடருக்கு முன்னதாகவே கண்டறிந்து அணியில் விளையாட வைக்க வேண்டும்.
#2.நியூசிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்
கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியை விட அதன் சொந்த மண்ணில் சாதகமாக இருக்கும். இது ஆடுகளம் மட்டுமல்லாமல் அதன் நிலையும் நியூசிலாந்து அணிக்கு சாதகமாகவே இருக்கும். சிலசமயம் ஆடுகளம் வடிவமைப்பு மற்றும் சில காரணங்களால் கூட நியூசிலாந்து அணிக்கு அதன் சொந்த ஆடுகளம் சாதகமாக அமைந்துள்ளது.
பொதுவாக நியூசிலாந்து ஆடுகளங்கள் சிறியதாக இருக்கும். அத்துடன் ஆடுகளத்தின் ஒரு பக்கம் மட்டும் சற்று நீளமாகவும் காணப்படும். இந்த மாதிரியான சில விஷயங்கள் இந்திய அணியை விட நியூசிலாந்து அணி சற்று நன்காக அறிந்திருக்கும்.
இந்திய அணி இந்த நிலைகளை அறிய சற்று காலம் தேவை. நியூசிலாந்து தொடரில் நோக்க வேண்டிய மற்றொரு விஷயம் காற்று வீசும் திசை. காற்று பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்துவீச்சாளர் சரியான திசையில் பந்துவீச்சை மேற்கொள்ளும் போது பந்து பேட்ஸ்மேன்களை நெருங்கும் போது காற்று பந்தின் திசையை மாற்றியமைக்கும் திறமையை கொண்டுள்ளது. இந்த இரகசியத்தை நியூசிலாந்து வீரர்கள் நன்கு அறிந்திருப்பர். எனவே அவர்களுக்கு பத்து வீச்சு மிகவும் சாதகமாக இருக்கும்.
#1.நியூசிலாந்து அணியின் வலிமையான மிடில் ஆர்டர்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய தொடரில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இருந்தாலும் இன்னும் இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேடித்தான் வருகிறது. தோனியின் பேட்டிங் வரிசையை பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா , தோனிக்கு நம்பர் 4 பேட்டிங் வரிசை சரியானதாக இருக்கும் என கூறுகிறார். ஆனால் கேப்டன் கோலியோ தோனியை நம்பர்-5 பேட்டிங் வரிசையில் தான் களமிறங்குகிறார்.
இந்திய அணி ராயுடு-வின் நம்பர்-4 பேட்டிங் வரிசையை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் அவரை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியில் நம்பர்-4 வரிசையில் வலிமை வாய்ந்த முதுபெரும் வீரர் ராஸ் டெய்லர் உள்ளார்.இவர் 34 ஸ்டிரைக் ரேட்-டை கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். டெய்லர் கடைசி 10 ஓடிஐ போட்டிகளில் 5 அரைசதம் மற்றும் 3 சதங்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
டாம் லேதம் நம்பர்-5 பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சுழற்பந்து வீச்சை சரியாக எதிர்கொள்வார். நியூசிலாந்து அணி இந்திய அணியில் சுற்றுப்பயணம் செய்தால் நிறைய லேதம், டெய்லரை காணலாம். ஜேம்ஸ் நிஸாம் சமீபத்தில் ஒரு சிறந்த கம்-பேக் குடுத்துள்ளார். நல்ல ஹிட்டிங் ஆட்டத்திறனுடன் தற்போது விளங்குகிறார்.