உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று, தென் ஆப்பிரிக்க அணி. இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் அணி என்று கருதப்படுகிறது, இந்த அணி. தென் ஆப்பிரிக்கா அணியில் பலமான பந்துவீச்சாளர்களும் சிறப்பான பேட்ஸ்மேன்களும் இந்த உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். எனவே, இந்த அணி உலக கோப்பை தொடரை வெல்வதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.தலைசிறந்த பௌலிங் கூட்டணி:
உலக கோப்பை தொடர்களில் பங்கேற்கும் அணிகளில் சிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள அணியாக திகழ்கிறது, தென்ஆப்பிரிக்கா. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டைன், ரபாடா, லுங்கி இங்குடி ஆகிய மூவரும் எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க காத்திருக்கின்றனர். மேலும், அணியின் இடம்பெற்றிருக்கும் சுழல் பந்துவீச்சாளர்கள் இம்ரான் தாஹிர் மற்றும் ஷம்ஷி ஆகியோர் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பார்கள். இம்ரான் தாகிர் மற்றும் ரபாடா ஆகியோர் 2019 ஐபிஎல் தொடரில் முறையே 26 மற்றும் 25 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். எந்த ஒரு பேட்டிங் அணியையும் சீர்குலைக்கும் சக்தி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களுக்கு உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.
#2.ஒட்டுமொத்தத்தில் பலமான அணி:
தென்னாப்பிரிக்க அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ஏற்றவாறு ஹசிம் அம்லா விளையாடி வருகிறார். இவர் மட்டுமல்லாது, கேப்டன் டுபிளிசிஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோரும் பேட்டிங்கில் மலைக்க வைக்கும் ரன்கள் குவிப்பதில் சிறந்தவர்களாவர். இவர்கள் மட்டுமல்லாது மில்லர் மற்றும் மார்க்கராம் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், பந்துவீச்சு தரப்பில் அனுபவம் வாய்ந்த டேல் ஸ்டெயின், திறமைவாய்ந்த ரபாடா மற்றும் லுங்கி ஆகியோர் தங்களது பந்து வீச்சு தாக்குதலை தொடுக்க உள்ளனர். மேலும், இம்ரான் தாஹீர் மற்றும் ஷம்ஷி ஆகியோரும் இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
#1.இவர்களது சோகம் முடிவுக்கு வருகிறது:
இதற்கு முந்தைய உலகக் கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு வந்து தோற்றுவிடுவார்கள். இத்தகைய மோசமான சாதனையை பின்னுக்குத் தள்ளி. இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது, தென்ஆப்பிரிக்கா அணி. அணியின் சில வீரர்கள் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாது தங்களால் முடிந்த ஆகச்சிறந்த பங்களிப்பினை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென ஓய்வு அளித்த ஏ.பி.டிவில்லியர்ஸ் இம்முறை உலக கோப்பை தொடரில் இல்லாதது தென்னாபிரிக்க அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகும். இருப்பினும், அவரது இடத்தை ஈடுகட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக வலம்வரும் தென்னாப்பிரிக்க அணி, இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கலாம்.