ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வீரர் ஆவார் விராட் கோலி, இவருக்கு பின்பு சிறந்து விளங்கும் வீரர் ரோகித் ஷர்மா. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக பல சாதனைகளை செய்துள்ளார் ரோகித் ஷர்மா.
சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 4 சதங்களை ரோகித் ஷர்மா விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் சிறந்து விளங்கும் இவர் 2013ஆம் ஆண்டு மும்பையில் இருந்து அணியை வழி நடத்த தொடங்கினார், இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளார். தனது பேட்டிங் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடர்களில் கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார் ரோகித்.
சென்ற முறை ரோகித் சுழற்பந்து வீச்சாளரான மார்க்கண்டேவை அறிமுகப்படுத்தினார், சிறப்பாகவும் செயல்பட்டார் மார்க்கண்டே. இதுபோல பலரையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராவார் ரோகித் சர்மா. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரராக விளையாடுவதில்லை மிடில் ஆர்டரில் விளையாடியிருந்தாலும் பல சாதனைகளை குவித்துள்ள இவர் அடுத்த ஐபிஎல் சீசனில் இவர் முறியடிக்க காத்திருக்கும் சாதனைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
#3 200 சிக்ஸர்கள் அடிக்கும் முதல் இந்திய வீரர்
சர்வதேச போட்டிகளில் சிக்ஸர்களின் மூலம் பல சாதனைகளை குவித்தவர் ரோகித், இம்முறை நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 292 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
கிறிஸ் கெயிலின் இலக்கானது ரோஹித் சர்மாவுக்கு சற்று தொலைவில் இருந்தாலும் 200 சிக்சர்களை அடிக்கும் முதல் இந்தியா வீரர் என்ற சாதனை ரோகித் படைக்கலாம். தற்பொழுது 184 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோகித் ஷர்மா. ரெய்னா 185 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், தோனி 186 சிக்சர்களுடன் முதல் இடத்திலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 16 சிக்சர்கள் மீதமுள்ள நிலையில், 200 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனை ரோகித் ஷர்மா இந்த ஐபிஎல் சீசனில் படைக்கலாம்.
#2 அதிக அரைசதங்கள்
டி20 போட்டிகளில் சதங்கள் அடிப்பதற்கு பேட்ஸ்மென்களுக்கு தேவையான ஓவர்கள் கிடைப்பதில்லை ஆகையால் டி20 போட்டிகளில் அரைச்சதங்களை வைத்தே பேட்ஸ்மேன்களின் தன்மை கணக்கிடப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளில் சிறந்து விளங்கி வரும் ரோகித், 34 அரைச்சதங்களை கொண்டு அதிக அரை சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுது. வார்னர் மற்றும் கம்பீர் 36 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளனர், சுரேஷ் ரெய்னா 35 அரைச் சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்க இன்னும் 3 அரை சதங்களே மீதம் உள்ளன.
கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் வார்னரும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற காரணத்தால் இந்த ஆண்டு ரோஹித் சர்மா என்ற சாதனையை படைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
#1 அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை வைத்து ரோகித்தின் நுணுக்கங்கள் மற்றும் அவரது தன்மையைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். 2013ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த வருடத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
2013ஆம் ஆண்டு கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 2015ம் இரண்டாவது முறையும் 2017ஆம் ஆண்டு மூன்றாவது முறையும் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இல்லாமல் சர்வதேச போட்டிகளிலும் கேப்டனாக நன்றாகவே செயல்பட்டுள்ளார் ரோகித்.
தற்பொழுது மூன்று கோப்பைகளை கொண்டுள்ள ரோகித் இந்தாண்டு கோப்பையை வெல்லும் பட்சத்தில் மகேந்திர சிங் தோனியை பின்னுக்குத்தள்ளி நான்காவது முறையாக கோப்பையை பெற்று அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைக்கலாம். தோனி சிஎஸ்கே அணிக்கு மூன்று முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.