தனது வாழ்வின் பெரும்பகுதியை கிரிக்கெட்டிலெயே செலவிட்டு பல உலக சாதனைகளை செய்து அசத்தியவர் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் . "மாஸ்டர் பிளாஸ்டர்" என்று அனைவராலும் அழைக்கப்படும் சச்சின் இந்திய அணியின் பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவரது பெரும்பான்மையான சாதனைகள் அதிக அரைசதங்கள் மற்றும் சதங்கள், அதிக ஆட்டநாயகன் விருதுகள் போன்றன ஆகும்.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை படைத்து , இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். அவரது ஓய்விற்குப் பிறகு அந்த பொறுப்பை இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி மேற்கொண்டு வருகிறார்.
பேட்டிங் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி , எதிரணயினர் யாராக இருந்தாலும் சரி அவர்களது சொந்த மண்ணிலோ அல்லது இந்திய மண்ணிலோ அதிரடியாக ரன்களை விளாசும் திறமை கொண்டவராக விளங்குகிறார். விராட் கோலி சீரான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்டவராக உள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் மன்னராக உலக கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.
நாம் இங்கு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி செய்து அசத்திய மூன்று முக்கிய சாதனைகளை பற்றி காண்போம். கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#1. ஒரே ஓடிஐ தொடரில் 500 ரன்களை குவித்த விராட் கோலி:
இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டுமே ஒரே ஓடிஐ தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 6 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்றது. இவர் இத்தொடரில் 3 சதங்களுடனும் , 186 என்ற சிறப்பான சராசரியுடன், 556 ரன்களை குவித்தார். விராட் கோலி-யின் சீரான ஆட்டத்தால் இந்திய அணி தென்னாப்பிரிக்கா-வில் தொடரை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஓடிஐ தொடரில் 400 ரன்களை கூட அடித்தது இல்லை . 2007ல் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சச்சின் அந்த ஓடிஐ தொடரில் மொத்தமாக 374 ரன்கள் குவித்தார். இவர் இத்தொடரில் 53.43 என்ற சராசரியுடன் 3 அரைசதங்களை விளாசினார் . ஆனால் அக்கால கட்டத்தில் சச்சினின் இந்த சிறப்பான ஆட்டம் தான் கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டது .
6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை அடிப்பது சாதரண விஷயம் கிடையாது . ஆனால் விராட் கோலி அச்சதனையை செய்து காட்டியுள்ளார் . சச்சினுக்கு பிறகு இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருபவர் விராட் கோலியே ஆவார். இதன்மூலம் சச்சின் இடத்தை விராட் கோலி பிடித்து விட்டார் என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது. விராட் கோலி இடத்தை நிரப்ப வேறு ஒரு வீரர் இந்திய அணிக்கு வருவது மிகவும் அரிதான ஒன்றாகும் .
#2. ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான மூன்று சதங்கள்
இந்தியன் பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டுமே தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை விளாசியுள்ளார். 2018ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் மூன்று போட்டிகளில் விராட் கோலி 140 , 157 * மற்றும் 107 ஆகிய ரன்களை விளாசி தள்ளினார் .
சச்சின் டெண்டுல்கர் தான் விளையாடிய 463 ஒருநாள் போட்டிகளில் இதுபோன்று தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசியது கிடையாது . 1997-98 ல் நடந்த "கொக்க கோலா" கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசியுள்ளார் . இந்த தொடரின் ஒரு போட்டியில் பாலை வனத்தில் வீசும் புயல் போன்று தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார் . அந்த போட்டியில் 143 ரன்கள் சச்சின் டெண்டுல்கர் விளாசித் தள்ளினார் . இந்த போட்டியே சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவர்களது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாகும் . மிகவும் சுவாரசியமாக இப்போட்டி அமைந்தது. அடுத்த போட்டிகளிலும் 130 ரன்களை அடித்தார் சச்சின் டெண்டுல்கர் . இந்த போட்டியும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இவரது இந்த அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 1997/98 ன் கோக்க கோலா கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வென்று வெற்றி வாகை சூடியது.
இந்த ஓடிஐ தொடரை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத போட்டியாக இருந்து வருகிறது.
#3. இரு ஒருநாள் தொடர்களில் ஒவ்வொரு தொடரிலும் 3 சதங்கள்
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மட்டுமே இரு வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு ஓடிஐ தொடரிலும் 3 சதங்களை விளாசியுள்ளார் . 2018 ன் தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விராட் கோலி 112 , 160* மற்றும் 129* ஆகிய ரன்களை குவித்துள்ளார் .
2018ன் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய போது விராட் கோலி முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை குவித்தார் . கோலி இந்த தொடரில் 151 என்ற பிரம்மாண்டமான சராசரியுடன் மொத்தமாக 453 ரன்களை விளாசித் தள்ளினார் .
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஒருநாள் தொடரில் கூட மூன்று சதங்களை விளாசியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை. விராட் கோலி மட்டுமே முறியடிப்பார் என தெள்ளத்தெளிவாக நமக்கு தெரிகிறது . இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார் . அத்துடன் அவரை விட மேன்மேலும் பல உலகச்சாதனையை படைப்பார் எனவும் நமக்கு தெரிகிறது .
தற்போது வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுள் நிறைய சச்சின் டெண்டுல்கர் மற்றும் நிறைய விராட் கோலி இந்திய நாட்டில் காணப்படுகின்றனர் .